முற்றம்

மனித உரிமைகளுக்காக போராடிய மலாலா யூசுப்சாய்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இறுதித் தேர்வுகளை முடித்த பின்னர் தனது "மகிழ்ச்சியையும் நன்றியையும்" தெரிவித்துள்ளார்.

22 வயதான இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் தத்துவம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை படித்துவந்தார். இந்நிலையில் 3வருட பட்டப்படிப்பை நிறைவுசெய்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவுட்டுள்ளார். அதில் தனது குடும்பத்தினருடன் பட்டமளிப்பு கேக் ஒன்றினை வெட்டி கொண்டாடுவதாக உள்ளது.

"ஆக்ஸ்போர் பல்கலைக்கழகத்தில் எனது; தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பட்டப்படிப்பு முடித்தவுடன் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் எவ்வாறு இப்போது வெளிப்படுத்துவது என தெரியவில்லை. இப்போதைக்கு, நெட்ஃபிக்ஸ், வாசிப்பு மற்றும் தூக்கம் என செலவிடப்போகிறேன்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடி வந்த மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார். பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஒருநாள் வரும் வழியில் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையில் சுடப்பட்டார். ஆபத்தான காயங்களிலிருந்து குணமடைந்த பின்னர், அவரும் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்தின் பர்மிங்காமிற்கு இடம் பெயர்ந்தனர்.

2014 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசை மலாலா யூசுப்சாய் தன் 17ஆவது வயதில் பெற்றுக்கொண்டார். இப்பரிசை வென்ற மிக இளம்வயதிப்பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரை ஆக்ஸ்போர்டில் உள்ள லேடி மார்கரெட் ஹால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

 https://twitter.com/Malala/status/1273775945917378562

 

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.