முற்றம்

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

pachydermtales என்னும் இணையதள இலக்கிய ஆலோசனை நிறுவனம் ukiyoto publishing நிறுவனத்தோடு இணைந்து, ஆம்பல் என்னும் சிறுகதை எழுதும் இப் போட்டியை நடத்துகின்றது.

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைப் புத்தகமாக வெளியிட்டுத்தர உள்ளதாகவும், முதல் முறையாக எழுதும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் போட்டியினை நடத்தும், pachydermtales நிறுவனம் அறிவித்துள்ளது.

தாமரையின் மென்மையுடன் ஒரு பெண் யானையின் வலிமையான மந்திர இணைவு பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா ? பெண்ணின் உள் வலிமையை அடையாளப்பூர்வமாகக் கண்டுபிடிப்பதற்கான ஒரு அருமையான வாய்ப்பை "ஆம்பல்" உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் ஃபெமினோசென்ட்ரிக் சிறுகதைகளுடன் ஜுன் 30ந் திகதிக்குள் வாருங்கள் என அழைப்பும் விடுத்துள்ளது.

pachydermtales நிறுவனத்தின் முன்னோக்கிய இந்த முயற்சிக்கு, தமிழ்மொழியிலான ஊடக அனுசரணையை, 4Tamilmedia.com வழங்குகின்றது.

போட்டி விவரங்கள்குறித்து அறிய: https://www.ukiyoto.com/events/aambal என்ற இணையதளத்தில் காணலாம்.

இப்போட்டியைப் பற்றி மேலும் அறிய www.pachydermtales.com யைத் தொடர்புகொள்ளுங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.