முற்றம்

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

கபாலீஸ்வரர் கோயில் கொண்டிருப்பதும், இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தாமஸின் அடக்கஸ்தலான சந்தோம் தேவாலயம் இடம்பெற்றிருப்பதும், புகழ்பெற்ற ராமகிருஷ்ண மடமும், விவேகாநந்தர் வருகை தந்த ஐஸ் அவுஸும் என அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக 63 மூவர் விழா உலகப் புகழ்பெற்றதாக இருக்கிறது.

அப்படிப்பட்ட மயிலாப்பூரின் மற்றொரு சிறப்பு மூலிகைப் பொருட்களும் பூசை சாமான்களும் விற்கும் தெப்பக்குளக் கடைவீதிகள். அங்கே கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டி இருக்கும் ‘அம்மாள் மெஸ்’ சைவ உணவுப் பிரியர்களுக்கு சொர்க்கம். மைலாப்பூரில் மற்றொரு முக்கியமான சிற்றுண்டி உணவகம் ‘ஜன்னல் கடை’.

கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு வாசலுக்கு அருகிலுள்ள பொன்னம்பலா வத்தியார் தெருவில் உள்ள ஒரு சிறிய நீல ஜன்னலில் இயங்கும் பஜ்ஜி கடை, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மைலாப்பூரில் ஒரு அடையாளமாக மாறிவிட்டிருந்தது. அந்த அளவுக்கு அந்த ஜன்னல் கடையின் பஜ்ஜியின் ருசி சென்னை முழுவதும் பிரசித்தம். இத்தனைக்கும் அந்தக் கடைக்கு தொடக்கம் முதலே ‘பெயர் பலகை’ கிடையாது. ‘சுவை வழி’ விளம்பரத்தால் பிரசித்திப்பெற்ற கடை.

அந்தக் கடையின் நீல நிற ஜன்னலுக்குப் பின்னால் தெரிந்த இரண்டு முகங்களில் ஒருவர் சிவராமகிருஷ்ணன் என்கிற ரமேஷ் தற்போது உயிருடன் இல்லை. 58 வயதான அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோவிட் -19 தோற்றுக்குப் பலியானார் என்ற செய்தி சென்னை முழுவதும் பரவி ஜாதி, மத பேதமின்றி பலரையும் வருத்தமடையச் செய்திருக்கிறது. குறிப்பாக மயிலை வாழ் இஸ்லாமிய மக்கள் அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு கலங்கினார்கள். அவர்கள், ரமேஷின் கைமணத்துக்கு ரசிர்கள். அவர்களில் பலரையும் இஸ்லாமிய வட்டார வழக்கில் ‘அத்தா’ என்று பாசமுடன் அழைத்தவர் ரமேஷ்.

இவரது பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றின் ருசிக்குக் காரணம் கலப்படமற்ற பொருட்கள், தரமான எண்ணெய் அவற்றுடன் சேர்ந்து தங்கள் பேரன்பைப் பாறிமாறியது தான். தற்போது மறைந்த ரமேஷின் சகோதரர் சந்திரசேகரன் ‘ஜன்னல் கடை’யைத் தொடர்வார் என்று நம்பலாம். ஆனால், ‘அடுத்தமுறை செல்லும்போது பஜ்ஜியுடன் சேர்ந்து வீசும் ரமேஷின் அன்பெனும் வாசனை வீசுமா?’ என்று கேட்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள்.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.