முற்றம்

பிரபல Video On Demande (VOD) தளமான Netflix இல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது Never Have I ever தொடர். வெளியானது முதல் அமெரிக்காவில் மாத்திரம் அல்லாது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தொலைக்காட்சிக்கு மறுபடியும் அரிதான வேற்று இனத்தவர்களின் குரல்களை கேட்க வைக்கும் முயற்சி என்றும் தெற்காசியாவின் புதிய இளம் நடிப்புத்திறன் மிக்க முகங்களை அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு மறுபடியும் அறிமுகப்படுத்திய தொடர் என்பதுமே இதன் பாராட்டுக்கு காரணம்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான மைத்திரி ராமகிருஷ்ணன். இந்த தொடரின் கிரியேடிவ் ஹெட், மற்றும் எழுத்துருவாக்கியவர் Myindi Kaling. அவர் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தாயார் வட இந்தியாவை பூர்வீமகாக கொண்டவர்.

அமெரிக்காவில் பிறந்து வளரும் பதின்ம வயது பெண்ணான தேவி விஷ்வகுமார் (மைத்திரி ராமகிருஷ்ணன்), தனது கல்லூரி வாழ்க்கையின் போது தான் அதிகம் பாசம் வைத்திருக்கும் தந்தையை இழந்துவிடுகிறாள். தாயாரோ, பதின்ம வயது பெண்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்க முடியுமோ அத்தனையும் விதிக்கிறார்.

தேவி விஷ்வகுமாரோ எல்லோரையும் மயக்கும் ஒரு கட்டுடம்பான வாலிபனுடனும் ஒரு நாளாவது காதல் கொண்டு உறவாட ஆசைப்படுகிறாள். அனைத்தும் பதின்ம வயதுக் கோளாறின் அப்பாவித் தனமான ஆசைகள். ஒரு பக்கம் தனக்கு இயலுமான அளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்த தந்தையின் திடீர் பிரிவு, இன்னொரு பக்கம் பேசிச் செய்யும் திருமணத்திற்கு தனது மைத்துனியை தயார்படுத்தி வரும் தாயார். நண்பர்களின் பார்வையில் தான் ஒரு பட்டிக்காடு என தானே நினைத்துக் கொள்கிறார்.

இந்த அனைத்து அந்நியோன்னமான சூழல்களிலிருந்து தேவியால் வெளிவர முடிகிறதா என்பதே மீதிக் கதை. பொதுவாக இந்தியர்கள், அல்லது தெற்காசியர்கள், அமெரிக்க மேற்குலகத்தவர் மீது வைத்திருக்கும் இனவாத மைய கருத்துக்களை நகைச்சுவையாக கண்டிக்கும் இத்தொடர் மறுபக்கம் மேற்குலகவத்தர்கள் ஒரு இந்திய, தெற்காசிய பெண்கள் மீது வைத்திருக்கும் இனவாத சிந்தனைகளையும் உடைத்தெரிகிறது.

உணவு பழக்கம், உடைப்பழக்கம், பதின்மவயது காதல், பாலியல் உறவு என அனைத்திலும் இன்றைய இளம் தலைமுறையினரின், ஆசைகள், பரிதாபங்கள், ஆபத்துக்கள் என அனைத்தையும் மிக நகைச்சுவையாகவும், அழகாகவும் அலசியிருக்கிறது இத்தொடர். அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரித்தான சில கிளிஷே ஸ்டைல்களான காலேஜ் வாழ்க்கை உடைகள், மொழி தவிர்த்துப் பார்த்தால், பார்க்கக் கூடிய தொடர் தான்.

பொழுதுபோக்காக அனைத்து எபிசாட்டுக்களையும், ஒரே மூச்சில் Netflix இல் இதை பார்த்து முடித்தவர்கள் அதிகம்.

இத்தொடர் தொடங்கப்படும் போது, 15000 பேருக்கு மேற்பட்ட பதின்ம வயதினர் Casting Call க்கு அழைக்கப்பட்டு அதில் மைத்திரி ராமகிருஷ்ணன் தெரிவாகியிருக்கிறார். இதன் இயக்குனர் Maindi Calling இன் சிறு வயது கல்லூரி அனுபவங்களையும், மைத்திரியின் தற்போதைய பள்ளி அனுபவங்களையும் இணைத்து கதையை பிண்ணியிருக்கிறார்கள். மைத்திரியின் நடிப்பு அசரவைக்கிறது. அலட்டிக் கொள்ளாத, அச்சப்படாத, மிக இயல்பான நடிப்பு. «கடந்த 4 வருடங்களில் இப்படியொரு தெற்காசிய நாட்டவர்களை பிரதிபலித்து ஒரு அமெரிக்க தொடர் வந்ததில்லை. அவர்களை பிரதிபலித்து இதுவரை காண்பித்த முகம் அனைத்தும் தீவிரவாத முகம் தான் » என்கிறார் பிரபல் ஃபோர்ப் பத்திரிகையின் ஆசிரியர்.

வெறும் நாடக மேடை அனுபவங்களை மாத்திரம் வைத்து நடிக்க வந்தவர் மைத்திரி. இன்று இந்த தொடர் மூலம் தனக்கான ஒரு சினிமா அறிமுகத்தை நன்றாக தடம்பதித்திருக்கிறார். நான் இலங்கைத் தமிழர் அல்ல. கனேடிய தமிழர் எனச் சொல்லும் அவர், இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளால், இலங்கையை என்னால் ஏற்க முடியவில்லை என்றும் சொல்கிறார்.

Never Have I Ever என்றால், எப்போதும் நிலையாக இருக்கக் கூடிய ஒன்று இதுவரை எனக்கு கிடைத்ததில்லை என அர்த்தம். ஆனால் இந்த Netlix தொடர் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் புகழும், மரியாதையும் அவருடைய எதிர்கால கலைவாழ்க்கைக்கு நிலையான அஸ்திவாரத்தை போட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் மைத்திரி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

- 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.