முற்றம்

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

சாலையோர தள்ளு வண்டிகளிலும் கூட இன்று சாப்பாடு 40 ரூபாய் விற்கும் காலம் இது. இப்படிப்பட்ட காலத்தில், மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் சிறு அளவில் உணவகம் வைத்து, வெறும் 10 ரூபாய்க்கு கடந்த 50 ஆண்டுகளைக் கடந்து சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசியாற்றி வந்தவர் ராமு தாத்தா. இவரது புகழ் சர்வதேச ஊடகளிலும் வலம் வந்தது. தற்போது கோரான காலம் அந்த மனித நேயரின் உயிரைப் பறித்துக்கொண்டுவிட்டது.

மதுரை, திருமங்கலத்திற்கு அருகேயுள்ள வில்லூர் என்ற கிராமம்தான் ராமு தாத்தாவும் சொந்த ஊர். 91 வயதிலும் தானே அரிசையை வடித்து சோறாக்கி, தானே சாம்பார் வைத்து, காய், கறி செய்து அசத்துவார். சாப்பாட்டுடன் துவையல் மற்றும் அப்பளமும் உண்டு. புதிதாக 10 ரூபாய் சாப்பிட வருபவர்களை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்வார். மறக்காமல் அவர்களிடம் ‘சாப்பாடு எப்படியிருந்தது?’ என்று அக்கறையுடன் விசாரிப்பார்.

மதுரை அரசு மருத்துவனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், சுற்றியுள்ள அன்றாட கூலித்தொழிலாளர்கள் இவரது உணவகத்தில் சாப்பிட்டு வந்தனர். அம்மா உணவகம் வருவதற்கு முன்பே ராமு தாத்தாவின் இந்த மலிவு விலை உணவகம் கடந்த 50 ஆண்டாக பேருந்து நிலையம் அருகே ஒரு ‘வள்ளலார் அன்னச்சாலை’ போல செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கால் அணாவுக்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா, அதன்பிறகு 1 ரூபாய், 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என்று ஏழைகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் உணவு வழங்கி வந்த ராமு தாத்தா கடந்த 10 ஆண்டுகளாகவே 10 ரூபாய்க்கு வழங்கி வந்தார். அவரது மறைவு மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.