முற்றம்

பிரேசில் நாடு இன்று கோரோனாவுக்காக அதிக உயிர்களை விலையாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அங்கே மருத்துவப்பணியாளராக பணிபுரியும் நடுத்தரவயதுப் பெண் அனா. அவர் தனது அனுபவங்களை நியூயார் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியாக அளித்திருக்கிறார். இதோ அவரது குரலின் தமிழாக்கம்.

‘எனது பெயர் அனா ரூத் சன்டானா. நான் ஒரு நர்சிங் டெக்னிசியன், பிரசேல் நாட்டின் பெலன் டோ பாரா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். நான் பணியும் மருத்துவமனையிலேயே கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்படுவேன் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை. இது எனது அனுபவம்.

என்னுடைய தலை முடி நீளமாக இருக்கும். விரைவில் அதை சுத்தப்படுத்தி கழுவுவதற்காக குட்டையாக வெட்டிவிட்டேன். என்னுடைய வீட்டிற்கு வைரசை கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. மருத்துவமனை பணி முடிந்த பிறகு, நான் என்னை வீட்டு அறையில் தனிமைப்படுத்திக் கொள்வேன். இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் மகனுடன் குறைவாகவே அதுவும் செல்பேசியில்தான் பேசுவேன். வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தவிர வேறு வழியில்லை.

நாங்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் 24 மணி நேரம், மருத்துவமனையில் பணிபுரிவோம். ஏப்ரல் மாதம் முழுவதும் இப்படித்தான் வேலை செய்தோம். இதற்கு முன் பார்த்திராத ஒன்றுடன் நாங்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இது ஒரு போர்க்களம் போலவும் இருக்கிறது. அப்போது பதட்டமான தருணங்கள் பல இருந்தன. நானே மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மக்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் இறந்து போவதைக் கண்டு தினசரி அழுவேன். எனக்குத் தெரிந்து என் சக ஊழியர்களில் 90% பேர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 19 பேர்கள் இறந்து போயிருக்கின்றனர். அவர்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தொழில்நுட்ப பணியாளர்களும் உண்டு.

கடந்த ஏப்ரல் 20 முதல் நானும் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். என்னுடைய நிலைமை வேகமாக மோசமடைந்தது. தொற்றால் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த என்னுடைய சக ஊழியர்களுடன் நானும் சேர்க்கப்பட்டேன். பணியாற்றிய மருத்துவமனையிலேயே நானும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவேன் என்பதை ஒரு போதும் கற்பனை செய்ததில்லை.

சற்றே நலமடைந்ததும் நான் பணிக்கு திரும்பினேன். அப்போதும் உடல் வலியும், ஒரு நுரையீரலும் என்னை துன்புறுத்தின. மருத்துவமனையில் தீவிரமாக பணியாற்றும் போது மிக அதிகமான சக்தியை இழப்பதால் நான் எப்போதும் தீவிர களைப்பில் இருக்கிறேன். இதே உடல்வலியையும், மூச்சு திணறலையும் நான் தொற்றால் நோயுற்ற போது உணர்ந்திருக்கிறேன். எனினும் என் பணியைத் தொடர்கிறேன்.’

-இவரைப்போல லத்தின் அமெரிக்கா முழுவதும் கொரோனாவுடன் போராட்டும் முன்களப் பணியாளர்களின் அனுபவங்களும் அர்ப்பணிப்பும் முச்சுத்திணற வைக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.