முற்றம்

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

உலக அளவில் முத்திரை பதித்து சாதனை படைத்து வரும் இளைஞர் வரிசையில் சமீபத்திய சேர்க்கை சென்னையைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜன். ஒரு நிமிடத்தில் அதிக பட்ச ட்ரம் பீட்ஸ் அடித்தவர் (2109 BPM) என்ற வகையில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து ஒட்டுமொத்த இசையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர். 'பத்மஸ்ரீ' பட்டத்துக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் 'பாலஸ்ரீ' பட்டம் உட்பட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏழு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சித்தார்த்துக்கு இந்த கின்னஸ் சாதனையானது உலகின் அதிவேக ட்ரம் இசைக் கலைஞர் என்ற மேலும் ஒரு சாதனை மகுடத்தையும் சூட்டியிருக்கிறது. உலகின் ஏழு மேதைகளில் ஒருவர் என்று நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலின் பாராட்டுதல்களையும் இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட இசை வடிவங்களையும் வேறுபட்ட இசைக் கலைஞர்களையும் உள்ளடக்கிய 'லயாத்ரா' என்ற புதிய முயற்சியில் இப்போது இசைக்களம் காண்கிறார் சித்தார்த். புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைக் கொண்டு, சர்வதேச அளவில் பிரபலமான பாடல்களை இந்திய ரசனைக்கேற்ப வழங்குவதே 'லயாத்ரா'.

ரசிகர்களை நினைத்து கர்வம் கொள்ளும் தனுஷ்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற ட்ரம்ஸ் இசை மேதையான ஜம்மி பார்டர் பங்கு பெறும் 'ரன்' பாடல் லயாத்ராவின் முதல் பாடலாக வெளியாகவிருக்கிறது. இது குறித்து விவரித்த சித்தார்த் "எனது சிறுவயதிலிருந்தே எனக்கு ரோல் மாடலாக இருந்த ஜம்மி பார்டர் எனது இசைக் கோர்ப்பில் பங்கு பெறுவதன் மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஒரு ட்ரம் இசைக் கலைஞர் மற்றொரு ட்ரம் இசைக் கலைஞரின் இசைக் கோர்வையில் வாசிப்பது என்ற தனித்துவம் மிக்க இந்த கருத்தாக்கம், என் வாழ்வின் மறக்க முடியாத மகத்தான தருணங்களை எனக்கு வழங்கியிருக்கிறது. ட்ரம்ஸ் இசைக் கருவியின் ஆதிக்கம் மிகுந்திருப்பினும், அதனுடன் இணைந்து இடையிடையே வரும் வெவ்வேறு இசைக் கருவிகள் புதுமை மிகுந்த த்ரில்லான அனுபவத்தை இசை ரசிகர்களுக்கு வழங்கும்" என்கிறார் சித்தார்த் நாகராஜன். புகழ் பெற்ற இசைக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் சித்தார்த்தின் தந்தை நாகி, மேஸ்ட்ரோ இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களிடம் ரிதம் ப்ரோகிராமராகப் பணியாற்றியவர். சித்தார்த்தின் தாயார் வித்யா நாகியும் பாடகி மற்றும் இசை ஆசிரியை. சர்வதேச அளவில் புகழ் பெற்ற கலைஞர்களுக்காக ட்ரம்ஸ் வாசித்து வரும் சித்தார்த் இசைக் கோர்வை செய்து தயாரித்த ஆல்பங்கள், ஸ்பாட்டிஃபி, ஆப்பிள் ஸ்டோர்ஸ் போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.