முற்றம்

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஒவ்வொரு 40 செக்கன்கள் ஒருவர் வீதம் மரணிக்கிறார்கள். கூடுதலாக இளம்பருவத்தினர்களே இப்பட்டியலில் உள்ளார்கள். இத்தரவுகளில் அதிர்ச்சி தரக்கூடியது தன்னுயிரை மாய்த்துக்கொள்வதில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை வீதம் அதிகம் என்பதே!

சமூகத்துடன் அதிக நேரம் செலவிடும் ஆண்கள் தங்களுக்குள் வரும் உளரீதியான பாதிப்பு உணர்வுகளை வெளியில் கூறுவதே இல்லை. பெண்கள் அழுது புலம்பியாவது வேதனையை கரைத்துக்கொள்வர். ஆனால் ஆண்கள் மனம் விட்டு அழுவதே இல்லை.

தற்கொலைகளுக்கான காரணங்களாக அதிதி மன அழுத்தம், பொருளாதார நேருக்கடிகள், மணப்பிரிவுகள், நேருங்கியவரின் திடிர் மரணம் என முக்கியமானதாக கருதப்படுகிறது. 98வீதம் மன ரீதியான தீவிர நோய் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு தற்கொலை எண்ணங்கள் தோன்றுபவர்களுடன் உரையாடல்கள் மேற்கொண்டு ஆறுதல்படுத்தி அவ் எண்ணங்களை மாற்றியமைத்து அவர்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை எடுத்து வழங்குவதற்காகவே பல தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. பலர் அந்நிறுவனங்கள் பற்றி தெரியாமலே தங்களது பிரச்சனைகளுக்கான விடைகளை தேடாமலே ஒரே நிரந்தர தீர்வாக தற்கொலையை நாடுகிறார்கள்.

கனடா நாட்டைச் சேர்ந்த தற்கொலைத் தடுப்பு கற்றல் நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் ஆண்களுக்கு தோன்றும் தற்கொலை எண்ணங்களை எவ்வாறு களைவது குறித்து சில உபயோகமான ஆலோசனைகளை தந்திருக்கிறது. அந்த ஆலோசனகள் இப்போதைய சூழலில் உள்ளவர்களுக்கு சிறு உதவி புரியலாம். அதில் எழுதியிருந்த ஆங்கிலத்தகவல்களை இயற்றளவு தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்.

நீங்கள் மிகவும் வருத்தப்படும் உங்கள் நண்பருடன் எப்படி உரையாடுவது?

1. ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்

உங்களது நண்பர்களில் எவரெனும் இயல்பை விட சற்று வித்தியாசமான போக்கை வெளிப்படுத்தினால் அவர்களிடம் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். பின்வருவன அவர்களது எச்சரிக்கை அறிகுறியாகும்.

ஊ+ம்

கைப்பேசி பாவனையை குறைப்பது; (குறுந்தகவலுக்கு பதிலளிக்காமை; (வரும் அழைப்புக்களை பெரும்பாலும் நிராகரிப்பது)
குடிப்பழக்கம் இருந்தால்; இயல்பை விட அதிகம் அருந்துவது
சோர்வுநிலை அதிகரித்து காணப்படல் அல்லது பொதுவிடயங்களிலிருந்து விலகி இருத்தல்
வாழ்க்கைத்துன்பங்களை அதிகம் பேசுவது
இயல்பை விட அதிதீ கோபம் அல்லது விரக்தியாக காணப்படல்.

இவ்வாறு ஏதேனும் நீங்கள் அறிந்துகொண்டால் அடுத்ததாக;

2. நல் உரையாடலைத் தொடங்குங்கள்

முதலில் ஒரு வசதியான சூழலை தேர்வுசெய்யுங்கள்.

தொலைபேசி வழியாக
தொலைதூரம் வாகனம் ஓட்டும்போது
விருப்பமான அல்லது நீங்கள் எப்போதும் சந்தித்து கொள்ளும் வசதியான இடம்
அல்லது ஒரு வேலைத்திட்டத்தில் ஒன்றாக பணிபுரியும் போது

கீழ் உள்ளவாறு உரையாடலை தொடங்கலாம்.

நீங்கள் அவர்களிடத்தில் அவதானித்தவற்றை குறிப்பிடுங்கள்.

“சிறிது நாட்களாக உங்களிடமிருந்து நான் அதிகம் மாற்றங்களை பார்க்கிறேன்; எல்லாம் சரியாக உள்ளதா? ”என்று ஆரம்பிக்கலாம்.
அவரைக் குறை கூறும் விதத்திலோ அல்லது வெட்டகப்படும்படி கேட்க வேண்டாம்.

3. தொடர்ந்து உரையாடுங்கள்

சில கேள்விகளைக் கேளுங்கள், அவர் சொல்வதை அவதானியுங்கள்

"வாழ்க்கை உங்களுக்கு வெறுப்பதாக அன்று ஒருநாள் சொன்னீர்களே ... அப்படி என்ன நடந்தது?"
உடனடியாக சிக்கலைத் தீர்ப்பதைத் தவிர்க்கவும்.

அவர் கூறும் பதில் மிகைப்படுத்தப்படாமலும் கூறும் விஷயத்தையும் மாறவிடாமல் தொடருங்கள்

அவரை ஆதரித்து, அவரது உணர்வுகளை ஏற்றுக்கொண்டு : " நீங்கள் கூறுவது கடினமாகத்தான் உள்ளது" என்றவாறு தெரிவிக்கலாம்.

நீங்கள் இன்னும் அவரைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், தொடர்ந்து கேளுங்கள்: “நீங்கள் தற்கொலை பற்றி யோசிக்கிறீர்களா?” அவர் ஆம் என்று சொன்னால், பயப்படாமல் அவருக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள் : “என்னிடம் சொன்னதற்கு நன்றி. அதைச் செய்வது மிகவும் கடினம். இதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா? நான் உங்களுக்காக இருக்கிறேன்.' என அவரைத் தைரியப்படுத்துங்கள்.


4. உங்கள் கடமையினை தொடருங்கள்

நீங்கள் ஒரு நண்பரே ஆலோசகர் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

இதுகுறித்து அவர் வேறு யாரிடம் கூறியுள்ளாரா? அல்லது மற்றவர்களை அணுக அவரை ஊக்குவிக்கவும்.

முக்கியமாக அப்பிரதேசத்தில் உள்ள தற்கொலைகளை தடுக்கும் பொது நிறுவன சேவைகளுக்கு தொடர்பு கொண்டு அழைக்கவும்.

அவருடன் அடிக்கடி உரையாடலைத் தொடர்ந்தவண்ணம் செயல்படுங்கள்

அவர் இறப்பதற்கான உடனடி திட்டங்கள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய சேவை நிறுவனங்களை அணுகி அவருக்கான ஆறுதலை பெற்றுக்கொடுக்கலாம்.

கனடாவின் 2019ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின்படி இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட வேறு எவரையும் விட நடுத்தர வயது ஆண்கள் (40-60) அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பேசாது சமூகமயமாக்கப்படுகிறார்கள், எனவே, ஒரு குழுவாக ஆண்கள் தங்கள் மன அழுத்தத்தை மறைத்து, தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் மற்றும் செயல்கள் மூலம் உணர்ச்சிகரமான வலியைச் சமாளிக்கலாம், அல்லது சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம். என ஆய்வுஅறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவ்வுலகில் யாருக்காக யாராக நாம் வாழ்கிறோம்? என்பதே புலப்படாமால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் யார் நமது இலட்சியம் என்ன? அதை அடைவதற்கான வழிகளை பயணிக்கிறோமா? முதலில் அதை கண்டுபிடித்தோமா? என்றால் இங்கே எவ்வளவு பேரால் விடை சொல்லமுடியும்? என்னைப் பொருத்தவரை வாழ்வதற்கு தைரியம் வேண்டும் சாவதற்கும் தைரியம் வேண்டும். ஆனால் ஒரு நொடித் தைரியம் சாவதற்கு தேவை. அதைக்கூட ஏன் வாழ்வதற்கு உபயோகிக்கக்கூடாது?

Source : suicideinfo

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'