முற்றம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் திகதி உலக மனிதநேய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அவ்வகையில் இந்த 2020ஆம் ஆண்டும் நாம் கட்டாயம் வாழ்த்திய வணங்கவேண்டிய நிஜ கதாநாயகர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் அனைவருக்கும் சுகாதார சேவைகள், சோதனை மற்றும் சிகிச்சை, பாதுகாப்பு ஆகியவற்றை அணுகுவதை உறுதி செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளவர்கள் உட்பட முன்னணி சுகாதார ஊழியர்கள் ஆவார்கள்.

குறிப்பாக COVID-19 தொற்றுநோய் காலப்பகுதியில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பிற அனைத்து அவசர காலங்களிலும் முன்நின்று உதவி புரியும் அனைவருக்கும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம் என உலக சுகாதார நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள்; உங்கள் கிராமத்திலிருந்தோ அல்லது நகரத்திலிருந்தோ உங்களுக்குத் தெரிந்தவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கும், முதியோரின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கும், தாய்மார்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக பிரசவிப்பதற்கும், தொடர்பாடல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் களத்தில் நின்று அயராது உழைத்து வருகிறார்கள். போர்சூழல், தொற்றுநோய் மற்றும் இயற்கை பேரழிவுகள் காலங்களில் சமூக ஆதரவு நல்குபவராகவும் செயல்படுகிறார்கள்.

இவர்கள் வெறும் கதையல்ல; நிஜ வாழ்க்கையின் கதாநாயகர்கள் எனும் கரும்பொருளிலில் காணொளி ஒன்றின் மூலம் அவ் இணையதளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


Source : www.who.int/
Image Credit : WHO/ Dairo Vargas

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.