முற்றம்

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றது போல தமிழ்நாட்டில் பலரும் உணர்ச்சி வசப்பட்டு சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.

உண்மையில்.. இ-பாஸ் ரத்து என்பதோ ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்பதோ அத்தனை மகிழ்ச்சி தரும் செய்தியல்ல. தளர்வு என்பது மக்களுக்குதானே தவிர கொரோனாவுக்கு அல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டுப்பாடுகள் பொதுமுடக்கம் போன்றவை அமலில் இருக்கும்போதே நாளுக்கு நாள் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதை விட கவலை அளிக்கும் விஷயமாக இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறதே அது குறைந்தபாடில்லை. கொரோனாவால் இறந்தவர்களின் செய்தி நமக்கு வேண்டுமானால் அது கடந்து செல்லும் ஒரு சாதாரண செய்தியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அந்த நோய்க்காக தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தர்வர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.

வாழ வேண்டிய இளம் வயதில் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து; கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் தங்கள் பிள்ளைக்கு காரியம் செய்துவிட்டு நிற்கும் பெற்றோர்களுக்குதான் அந்த வேதனையின் கொடூரம் தெரியும். நம் மனம் கவர்ந்தவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட எத்தனை பேரை நாம் இழந்திருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. எனவே அத்தகைய இழப்பும் வலியும் நமக்கு ஒருபோதும் வேண்டாம்.

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ‘மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ மற்றும் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு நிறுவனங்களில் செரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி நேற்று 300 தன்னார்வளர்களுக்குப் போடப்பட்டு ‘ மூன்றாம் கட்ட க்ளினிக்கல் ட்ரையல்’ தொடங்கியிருக்கிறது. இது வெற்றிபெற்றால் கொரோனாவுக்கான தடுப்பூசி முழு அளவில் பயன்பாட்டுக்கு வர 2021 ஜனவரி 15 தேதி ஆகும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அதுவரை நமக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே தளர்வுகள் இல்லையே என்பதற்காக கண் போன போக்கில் கால் போன போக்கில் செல்ல வேண்டாம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற அனாவசியமான பயணங்களையோ பொது இடங்களில் கூடுவதோ கூட்டங்களில் செல்வதை தவிர்ப்பதோ நலம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நலம்.

எனவே அவசியமான விஷயங்கள் தவிர அனாவசியமான விஷயங்களுக்கு வெளியில் செல்வதை தொடர்ந்து தவிர்ப்போம். இன்னும் சொல்லப்போனால் தமிழக மக்களுக்கான உண்மையான சவாலே இனிதான் துவங்கப்போகிறது. இதுவரை இழந்தது எல்லாம் போதும். இனி இருப்பவர்களையாவது நாம் பாதுகாப்போம். முகக்கவசம் தனிநபர் இடைவெளி போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதும் அவசியம். கேளிக்கையை வீட்டுக்கு வெளியே தேட நினைப்பது ஆபத்தாக முடியலாம். எனவே முற்றிலும் ஊரடங்கு தளத்தப்பட்டுவிட்ட நிலையில் நாளை முதல் மிக கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.