முற்றம்

இன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.

அதன் படி உலக இதய கூட்டமைப்பு;  (சி.வி.டி) இவ்வாண்டு இருதய நோய்களை வெல்ல இதயத்தைப் பயன்படுத்துவதை' நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒருவர் தங்கள் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதும் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மற்றவர்களிடையே வளர்க்கும்போதும் மட்டுமே நிகழும் விஷயங்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இம்மாதம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) மாதமாகவும் கருதப்படுகிறாது. பெண்களுக்கு வரும் நோய்களில் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளும் ஒன்று. அதில் பி.சி.ஓ.எஸ் எனும் நோயும் அடங்குகிறது.  (பெண்கள் சிலருக்கு ஜெனடிக், டயட் இன்சுலின் போன்ற காரணங்களால் போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தியாகமையே பி.சி.ஓ.எஸ் என அழைக்கப்படுகிறது)

ஒரு பெண் தனது மாதவிடாய் காலத்தைக் கொண்டிருக்கும்போது, குறைந்த ஈஸ்ட்ரோஜன் அவர்களின் இரத்த ஓட்டத்தில் காணப்படும். ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு மார்பு வலி ஏற்படுகிறது, மேலும் அவை இதயத்திற்கு குறைந்தளவான இரத்த ஓட்ட செயற்பாட்டை வழங்குவதை "டிரெட்மில் சோதனைகளில்" கண்டறியப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமான மாதவிடாய் சுழற்சியைக் கொண்ட பெண்களை விட ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம் என சொல்லப்படுகிறது.

"ஆஞ்சினா'' - இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் தற்காலிக மார்பு வலி. மார்பகத்தின் பின்னால் உணரப்படும் கனமான, எரியும் அல்லது அழுத்தத்தின் உணர்வு என்று பலர் இதை விவரித்திருக்கிறார்கள். இது கைகள் அல்லது கழுத்துக்கும் பரவக்கூடும். இது அதிகளவான உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தால் ஏற்படலாம்.

ஆஞ்சினா வலி பொதுவாக 30 நிமிடங்கள் வரை நீடிக்கும், ஆனால் அது மாரடைப்பு அல்ல; என விவரிக்கும் மருத்துவர்கள்; எனினும் இது மாரடைப்பாக முன்னேறலாம் என்கின்றனர்.

குறிப்பாக இந்த வலி அடிக்கடி உணரத்தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது. அங்கே நோயாளியின் டிரெட்மில் சோதனை மூலம் மருத்துவர்கள் ஆஞ்சினாவுக்கு பரிசோதனை செய்யலாம், இதயத் துடிப்பைக் கண்காணித்து போதுமான இரத்தம் கிடைக்கிறதா என்பதை அவதானிப்பர். தொடர்ந்து மேலதிக சிகிச்சை அளிக்கப்படும்.

மற்றுமொரு இணைப்பாக பி.சி.ஓ.எஸ்; பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் இதய நோய்களுக்கு காரணமாகிறது. ஆண் ஹார்மோன்களின் சாதாரண அளவை விட அதிகமாக பெண் கருப்பைகள் உற்பத்தி செய்யப்படுவது, மாதவிடாய் சுழற்சிகள் ஒழுங்கற்றவை அல்லது முற்றிலும் இல்லாதவை ஆகியவை பி.சி.ஓ.எஸ் அறிகுறிகள்.

பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இதய நோய்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அடிக்கடி கூறப்படுகிறது. ஒரு பெண் தனது மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது இதற்கான அறிகுறிகள் தென்படாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆனால் இந்த அறிகுறிகள் இதய நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதை நோயாளிகள் அறிந்திருக்க வேண்டும், உடனடியாக அவர்கள் மருத்துவர்களை அணுகுவது நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.

சத்தான உணவை அளவாக எடுத்துக்கொள்வது, மன அழுத்த மேலாண்மை; சீரான உடற்பயிற்சி, போதுமான நித்திரை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவாக இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Source  : indianexpress

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.