முற்றம்

இன்று உலக மொழிபெயர்ப்பு தினமாம். எட்டுத்திசையும் சென்று கலைச் செல்வங்கள் இங்கு கொணர்வோம் என்றான் பாரதி.

இந்த வருடம் மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.

அந்தக் காட்சிகளால் உணர்ச்சிவயப்பட்டு, பேர்கமோ வானொலியில் ஒரு அறிவிப்பாளன் தன் உணர்வுகளை கவிதையாகத் தந்தான். நானும் எனது மகளும் தமிழில் மொழி மாற்றம் செய்த உணர்வு பூர்வமான அந்தக் கவிதை வரிகள் இங்கே;

A Bergamo impari fin da piccolo che; சிறு வயது முதல் நான் பேர்கமோவில் பழகியவை இவை;

“Non ce la faccio” – non si può dire. "என்னால் முடியவில்லை" என்று சொல்ல கூடாது

“Non ci riesco”- non esiste." என்னால் இயலவில்லை" என்ற வாசகம் இல்லை

“Sono stanco”- non è mai abbastanza. "எனக்கு களைப்பாக உள்ளது" என்று ஒருபோதும் சொல்விதில்லை.

Cresci così, un po’ chiuso, un po’ con la convinzione di non essere mai all’altezza. இப்படியே ஒரு வைராக்கியமான குணத்துடன், எதற்கும் தகுதியானவன் என்ற எண்ணத்துடன் வளருவாய்.

Ecco come li riconosci quelli di Bergamo - testa bassa e a lavorare.  பேர்கமோவை சேர்ந்த தலை குனிந்து வேலை செய்யும் தொழிலார்களை  இப்படி தான் அடையாளம் காணுவாய் .

I bergamaschi, quelli veri, sono polentoni. பேர்கமோவை சார்ந்தவன், உண்மையில் மெதுவானவர்கள்

Si…perche’ la polenta è ciò che li rappresenta. எப்படியென்னறால் பொலேன்தா என்கிற அவர்கள் பூர்வீக உணவு செய்வதற்கே நிறைய நேரம் எடுப்பார்கள்.

Ruvida, dura e fredda fuori, con quella crosticina che si forma appena sfornata. வெளியில் இறுக்கமாக, முரடாக, குளிராக இருக்கும்.

Tenera e avvolgente dentro, non ti delude mai. ஒருபோதும் ஏமாற்றத்தை தராது உள்ளே மெதுமையாயிருக்கும்.

I bergamaschi sono proprio così: un po’ tonti, ruvidi e schivi; பேர்காமோவை சார்ந்தவர்களும் அப்படித்தன், கொஞ்சம் முரட்டு தனமும், கொஞ்சம் முட்டாள் தனமும் இருக்கும்.

Ma dentro sono buoni e dal cuore tenero. ஆனால் உள்ளே மென்மையானவர்களும் அன்பானவர்களும்.

Lo so, lo so, niente di speciale la polenta: acqua, sale e farina gialla; தெரியும் தெரியும் பெரிதா ஒன்றும் இல்லை, ரவை, உப்பு மற்றும் தணணீர் கலந்த பொலெண்தா.

Ma si sa, le cose semplici sono speciali perché rassicuranti, perché ci sono…I bergamaschi ci sono. ஆனால் அப்படிதான் , அற்புதம் இல்லாத விஷயங்கள் கூட அருமையானதாக இருக்கும். அது போலவே எப்போதும் உறுதியானதாக , பேர்கமோ மக்கள் இருப்பார்கள்

Sempre. Sempre Ci puoi contare.எப்போதும் அதை நீ நம்பலாம்.

Li puoi odiare, ma se te ne innamori…be’ allora sei spacciato, perché sarà per sempre. அவர்களை வெறுக்கலாம், ஆனால் நேசித்தால் அவ்வளவுதான், விட்டுப் போகவே மாட்டார்கள்.

Piange la mia Bergamo. என்னுடைய பேர்கமோ கண்ணிர் வடிகிறது.

Senza far rumore, per non disturbare. அதிக சத்தம் போடாமல், யாருக்கும் தொந்தரவு பண்ணாமல்.

Giace a terra, fatta a pezzi da un nemico vigliacco subdolo, che non si fa vedere. கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியால் சுக்குநூறாக்கப்பட்டு வீதியில் விழுந்து கிடக்கிறது.

Gli occhi sono bassi, tristi e pieni di paura. Ci sono solo ambulanze e silenzio. பயம் நிறைந்த கண்கள் கிழே பறக்கின்றன. வீதியில் அவாசர சிகிச்சை வண்டிகளும் அமைதியும் மட்டுமே.

Bergamo non ti posso abbracciare, ma tu non mollare proprio adesso. Ricordi ? பேர்கமோ உன்னை அரவணைக்க  இப்போது என்னால் முடியாது. ஆனால் நீ இப்போது மட்டும் விட்டுக் கொடுக்காதே. நினைவு இருக்கிறதா ?

“Non ce la faccio” – non si può dire. என்னால் முடியவில்லை" என்று சொல்ல கூடாது

“Non ci riesco”- non esiste. "என்னால் இயலவில்லை" என்ற வாசகம் இல்லை

“Sono stanco”- non è mai abbastanza. "எனக்கு களைப்பாக உள்ளது" என்று ஒருபோதும் சோர்வதில்லை.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.