முற்றம்

உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி  அனுசரிக்கப்படுகிறது.

இது உலகெங்கிலும் உள்ள மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனநல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுக்காக இவ்வாண்டு கலந்து கொள்ள வேண்டிய இலவச ஆன்லைன் வளங்கள், கருத்தரங்குகள், பேச்சுக்கள் அல்லது திட்டங்களின் பட்டியலின் தகவல்களில் சிலவற்றை தொகுத்துள்ளோம்.

உலக சுகாதார நிறுவனமான WHO டிஜிட்டல் வழியே மன அழுத்த மேலாண்மை குறித்த வழிகாட்டியை வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் குறுகிய மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதல் பயிற்சிகள் இதில் அடங்குகிறது.

மனநல ஆரோக்கியத்தை பேணுவதற்கான முதலீடை செய்யுமாறு உலக மக்களை அழைக்கும் உலகளாவிய திட்டமாக உலக சுகாதார அமைப்பு; உருவாக்கியுள்ளனர். இதில் உலகளாவிய மன ஆரோக்கியத்திற்கான கூட்டமைப்பு மற்றும் மனநலத்திற்கான உலக சம்மேளனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்றன.

1. #MoveforMentalHealth சவால் : உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் மன ஆறுதலுக்காக செய்யும் ஆடல், பாடல், சமையல், ஓவியம் அல்லது வேறு ஏதேனும் செயற்பாட்டை வீடியோ காட்சியாக பதிவிடலாம். இது #MoveForMentalHealth என்ற ஹேஷ்டேக்குடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள சொல்கிறது.

2. வாட்ஸ்அப் செயலியில் டிஜிட்டல் மனஅழுத்த மேலாண்மை குறித்த வழிகாட்டியையும் WHO அறிமுகப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் குறுகிய, எளிதில் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதல் பயிற்சிகள் இதில் அடங்கும்.

3. கூடுதலாக பேஸ்புக் மெசஞ்சரில் வடிவமைக்கப்பட்ட புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்துகிறது, இது மன ஆரோக்கியத்தைப் பற்றிய உரையாடல்களை எளிதாக்குகிறது.

4. அக்டோபர் 9 ஆம் திகதியிலிருந்து, 24 மணிநேர லைவ்ஸ்ட்ரீம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்பீக் யுவர் மைண்ட் (உங்கள் மனதில் உள்ளதை பேசுங்கள்) பிரச்சாரத்தின் மூலம் 19 நாடுகளில் ஏற்கனவே செயலில் உள்ள சிவில் சமூகக் குழுக்களின் மனநலம் மற்றும் அனுபவமுள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலகளாவிய கூட்டாளர் அமைப்புகள், இளைஞர்கள், வயதானவர்கள் தங்களது மனநலம் குறித்து உரையாடிவருகிறார்கள். மேலும் எல்ஜிபிடி சமூகம் உள்ளிட்ட குறிப்பிட்ட கருப்பொருள்களில் கூடுதல் நேர கலந்துரையாடலையும் நடத்துகின்றன.

5. அக்டோபர் 10 ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனம், முதன்முறையாக, மன ஆரோக்கியம் குறித்த உலகளாவிய ஆன்லைன் ஆலோசனை நிகழ்வை வழங்குகிறது. இந்த நிகழ்வில் உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் மனநோய் மற்றும் போதைப்பொருட்களின் தீங்கு விளைவிக்கும் பணிகளையும் தமது ஊழியர்கள் எவ்வாறு குறைத்துவருகிறார்கள் என்பதை காண்பிக்கும்.

இது தவிர உலகத் தலைவர்கள், மனநல வல்லுநர்கள் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருடன் இணைவார்கள், மேலும் மனநலத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, அனைத்துவித மனநோய்களிலும் பெரும்பாதி 14 வயதிலேயே தொடங்குகிறது, ஆனால் பெரும்பாலானவை கண்டறியப்படாமலும் சிகிச்சையளிக்கப்படாமலும் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

நன்றி : firstpost

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.