முற்றம்

அரபுலக வரலாற்றில் முதன்முறையாக 15 பெண் தீயணைப்பு வீராங்கனைகளைக் கொண்ட தீயணைப்பு படை ஒன்று அஜ்மானில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமீரகத் தீயணைப்புத் துறைக்கு இதுவரை ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால் இம்முறை அமீரகத்தைச் சேர்ந்த 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பது உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மத்திய கிழக்கில் தீயணைப்புத் துறையில் பெண்களையும் இணைத்த முதல் நாடு என்னும் பெருமையை இதன்மூலம் அமீரகம் பெற்றுவிட்டது. தீயணைப்பு வீராங்கனையாகப் பயிற்சி பெற்ற 15 பெண்களும் இதுபற்றி ஊடகங்களிடம் கூறும்போது: “கடின உழைப்பின் மூலம் நாங்கள் சிவில் பாதுகாப்புத் துறையில் இணைந்துள்ளோம். இளம் சிறுமியர்கள் மற்றும் பெண்கள் தடைகளைத் தாண்டி தாங்கள் விரும்பியதை சாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் தற்போது சாட்சியாக இருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முன்வந்த அமீரகத்தின் துணைப் பிரதமரும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான லெப்டினன்ட் கர்னல் ஷேக் சையீப் பின் சயீத் அல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.” என தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல,“இந்தப் பெண்களை பணியில் சேர்த்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். ராணுவ பயிற்சி மற்றும் வேலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல கடினமான பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே அவர்களால் இந்த இடத்திற்கு வர முடிந்திருக்கிறது. தீயணைப்பு பெண்கள் குழுவிற்கு தகுந்த பெண்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. நல்ல ஆரோக்கிரயம் மற்றும் திடமான உடற்கட்டு ஆகியவை இதில் பிரதான தேர்ந்தெடுக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன” என அமீரக சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரி அல் நஹாயான் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.