முற்றம்

கோவிட் -19 கொரோனா வைரஸ். இளவயதுகாரர்கள் பலருக்கே சவாலாக இருந்த இந்தப் வைரஸ் பெரும் தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீட்டிருக்கிறார், சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் ஒரு 107 வயதுத் தாய்.

வீடா பிரான்காசியோ என்ற பெருந்தாயின் வாழ்வு ஒரு நம்பமுடியாத கதை என எழுதுகின்றார்பத்திரிகையாளர் பட்ரிக் மான்சினி.

உண்மையில் அவர் ஒரு வலிமையான பெண். இரண்டு உலகப் போர்கள் மற்றும் "ஸ்பானிஷ்" காச்சல் பெருந்தொற்று எனபவற்றை அனுபவித்திருக்கும் அந்தப் பெண்மணி, 1913ல் பிறந்தவர். அவரை கோவிட் - 19 வைரஸ் கடந்த நவம்பரில் தாக்கியது. 76 வயதுடைய இவரது மகள் மரியாவும் வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு, லுகானோ மொன்கூக்கோ கோவிட் சிகிச்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வைரஸுடன் போராடி மீண்ட இறை விசுவாசமுள்ள இப்பெண்மணி, தற்போது கியாசோவில் உள்ள தனது குடியிருப்பில் கையில் ஜெபமாலையுடன் இருக்கின்றார். "அது கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் இங்கே இருக்கிறோம். நான் இன்னும் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்" என மெல்லிய குரலில் உரையாடுகின்றார்.

அவரது மகள் மரியா தாய் குறித்துப் பேசுகையில், "என் அம்மாவின் ரகசியம் ஆரோக்கியமான வாழ்க்கை. அவர் முதல் 50 ஆண்டுகளை ஒரு இத்தாலிய கிராமத்தில் கழித்தார். பின்னர் அவள் சுவிற்சர்லாந்து வந்தாள். அவர் இயற்கையையும் சிறிய விஷயங்களையும் எப்போதும் நேசித்த ஒரு பெண்" என்கிறார்.

"நான் மருத்துவமனையில் இருந்தபோது, ​​என் அம்மா எப்படி இருக்கிறார் என்று மருத்துவரிடம் கேட்க எனக்கு தைரியம் கூட இல்லை. எனக்கு உடம்பு சரியில்லை ஆனால் என் அம்மா மோசமாக இருந்தாள். அவளுக்கு கடுமையான நிமோனியா இருந்தது, அவள் இறந்துவிடுவாளோ என்று நான் பயந்தேன். சொர்க்கத்தின் பொருட்டு, மரணம் ஒரு சாதாரண விஷயம். ஆனால் என் அம்மா கோவிட்டால் இறப்பதை நான் விரும்பவில்லை. என் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் டாகடர்கள் சிகிச்சை செய்ய மாட்டார்கள் என்று நான் பயந்தேன். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் உண்மையான தொழில் வல்லுனர்கள் என்பதையும், உண்மையில் அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் " என நன்றியோடு நினைவுகூருகின்றார் மரியா.

- நன்றி : பத்திரிகையாளர் Patrick Mancini

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.