முற்றம்

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

அதேபோல் இலங்கையிலும் உள்ளூர் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சில வெளிநாட்டு திரைப்படங்களை ஆன்லைனில் காணும் வாய்ப்பை உள்ளூர் நிறுவனம் ஒன்று ஏற்படுத்தியுள்ளது. சகோதர மொழியான சிங்களம் போன்று உள்ளூர் தமிழ் கலைஞர்களின் படைப்புக்களும் வரவேற்பும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுவருகிறது. அவ்வகையில் அண்மையில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் காணக்கிடைத்த பதிவின் மூலம் இலங்கை தமிழ் திரைப்படத்துறையினரின் தன்னம்பிக்கையுடன் கூடிய திறமையையும் அறிந்துக்கொள்ள முடிந்தது.

'இலங்கை இளந்தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாயம்' என்ற வரிகளில் தொடங்கும் அந்த பதிவில் இலங்கையைச்சேர்ந்த தமிழ் கலைஞர்களின் படைப்பாக தமிழ் குறந்தொடர் பற்றியும் அதன் முன்னோட்டமும் பகிரப்பட்டிருந்தது.  'சன்டே" எனும் பெயரில் விறுவிறுப்பான குறுந்தொடர் ஒன்றை வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியீட உள்ளனர். நண்பர்கள் பலர் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கிய குறுந்தொடர்; இவ்வருடத்தின் முதல் படைப்பாக ஆதரவையும் வரவேற்பையும் படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

இணைப்பு :SUNDAY முன்னோட்டம்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.