முற்றம்

குளிர்காலம் மறைந்து இளவேனிற்காலம் ஆரம்பமாகையில், சுவிற்சர்லாந்தின் பல நகரங்களிலும் நடைபெறும் களியாட்ட விழாக்கள் பாரம்பரியமும் கலாச்சாரப் பண்புகளும் மிக்கவை.

கடுங்குளிரை மறக்கவும், உடற்சோர்வை நீக்கி உற்சாகவும் பெறவும் என்ற நோக்கில் மக்கள் கூடும் இந்தக் களியாட்ட விழாக்கள் இத்தாலிய மொழிப்பிராந்தியங்களில், carnevale எனவும், பிரெஞசு மொழிப்பகுதியில், carnaval எனவும், ஜேர்மன் மொழிபேசுவோரிடத்தில் fastnacht எனவும் அழைக்கப்படுகின்றன. இந்தக் களியாட்ட விழாக்கள் ஒவ்வொன்றும் நடைபெறும் பிரதேசங்களுக்கான கலாச்சாரப் பண்புகளால் சிறப்புறுகின்றன.

சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிப்பிராந்தியமான திச்சினோ மாநிலத்தில் பல்வேறிடங்களில் நடைபெற்றாலும், தலைநகர் பெலின்சோனாவில் நடைபெறும் "ரபாடான்" ( RABADAN) பிரசித்திபெற்றது. பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒருவார காலத்திற்கு நடைபெறும் இந்தக் களியாட்டவிழா, ரோமானிய முடியாட்சிப் பாரம்பரியப் பண்புகளுடன் நடைபெறும்.

திசினோவின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெலின்சோனா கோட்டைகள், யுனெஸ்கோவினால் கலாச்சார பாரம்பரியச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. அந்தக் கோட்டைகள் ராபாடன் களியாட்ட காலத்தின் போது, ராபாடன் மன்னரின் அரண்மரனயாகவும் மதிக்கப்படுகிறது. அந்த ஒரு வாரகாலத்திற்கு நகரத்தின் திறவுகோல், களியாட்டத்திருவிழா மன்னரிடம், நகரசபைத் தலைவரினால் கையளிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்படும். அலங்காரமான இந்தக் காட்சிகளைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பார்கள். உண்மையில் இந்தக் களியாட்டவிழா நடைபெறும் காலத்தில் குளிர் மிக அதிகமாக இருக்கும். அதனை மறந்து மக்கள் இசையிலும் நடனத்திலும், களித்திருப்பர்.

ரபடான் களியாட்டத்திற்கான வரலாறு நூற்றாண்டுகள் கடந்தது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பகலில் பசித்திருத்தலையும், இரவில் களித்திருப்பதையும் பாவனையாகக் கொண்டு இந்த களியாட்டத்திற்கு ரபாடான் என்ற பெயர் 1874ம் சூட்டப்பட்து. அன்றிலிருந்து படிப்படிப்படியாக வளர்ச்சி பெற்ற இக் கொண்டாட்டம், ஒரு வாரகால நீட்சியை, 70களில் பெற்றுக் கொண்டது.

90களிலிருந்து இக் கொண்டாட்டங்கள், நகரின் மையங்கள், தெருக்கள், சதுக்கங்கள் எனப் பலவிடங்களிலும் கொண்டாடடப்படும் பெருநிகழ்வாக மாற்றம் பெற்றது. இதனுடாகப் பல்வேறு உள்ளுர் கலைகளையும், கலைஞர்களையும், இசைக்குழுக்களையும். ஊக்குவிக்கத் தொடங்கினார்கள். இவை தவிரவும் இவ்வாறான கார்னிவல் களியாட்டங்களில் பங்குபற்றும் கலைஞர்கள் மட்டுமல்லாது பார்வையாளகளும், பல்வேறு வேடங்களில் தோன்றுவார்கள். இதனால் முகங்கள் மறைந்து போக மக்களிடையே சமமான ஒரு மனோநிலை காணப்படும்.

வார இறுதியில் நடைபெறும் ஊர்த்திகளின் பவனியில், பல பிராந்தியங்களின் இசைக்குழுக்களும், சமூக, அரசியல், விமர்சன நோக்கு வடிவங்களின் கேளிக்கையான ஊர்த்திகளும் இடம்பெறும். இவற்றுக்கான அவர்களது உழைப்பு பலநாட்கள் முதல் ஒரு வருட காலம் வரையில் இருக்கும். 30 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களும், பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கலாச்சாரத் திருவிழா, ஐரோப்பிய ரீதியில் கவனம் பெற்றதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.

நகரம் முழுவதும் மக்கள் கூடிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் இந்தப் பெருவிழா இந்த ஆண்டு கோவிட் 19 கொடுந் தோற்றினால், குறுக்கப்பட்டுவிட்டது. வீடுகளில் இருந்து இணையத்தின் வழியே பார்த்து மகிழும் இணையக் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுள்ளது. சிறகடித்துப் பறந்து மகிழும் பறவையைப் போன்ற மக்கள் மனநிலை கூட்டில் அடைக்கப்பட்டதைப் போன்று வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளது பெருந்துயரம். பழைய காட்சிகளை எண்ணிப் பார்ப்பது மட்டுமே இப்போதுள்ள ஆறுதல்.

-4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தப் பெருங் கொண்டாட்டத்தின் அழகியலை பின்வரும் கானொளிகளில் காணலாம்..

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..