முற்றம்

தினம் தினம் மகிழ்ச்சிதானே என்ற வாழ்வு மறைந்து போனதன் மற்றுமெரு வெளிப்பாடுதான் சர்வதேச மகிழ்ச்சி தினம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச் 20 ம் திகதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக 2012 ம் ஆண்டு அறிவித்தது. அன்றிலிருந்து உலகம் பூராகவும், மார்ச் 20ம் திகதியிலிருந்து உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

எப்படி இருக்கின்றீர்கள்? எனக் கேட்டால் பலரிடமுமிருந்து வரும் பதில் ஏதோ இருக்கிறோம் என்பதாகவே தற்போது உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறோம், நன்றாக இருக்கிறோம் எனப் பதில் தருவது மிகக் குறைவாக உள்ளது. ஏன் இது...?

இது கலாச்சார மாற்றம் தந்த பெரும் வலி. எமது வாழ்நிலை வசதிகள் பல மாறியுள்ளன. வசதிகள் பெருகியுள்ளன. ஆனால் மகிழ்ச்சியின் ஊற்று வற்றிவிட்டது. அதனால் பலரும் பழைய நினைவுகளில் மகிழ்ந்துகொள்கின்றோம். இந்த நிலையைத் தோற்றுவித்தது நம்மைச் சூழவுள்ள நுகர்வுக் கலாச்சாரம். இது வணிக நோக்கில் உருவாக்கப்பட்ட கலாச்சாரம். இதன் சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டதனால் வரும் ஏமாற்றங்கள் திருப்தியின்மையை, சலிப்பினைத் தருகின்றது. நாளாக நாளாக இது ஒரு பெரும் மன நோயாக மாறிவிடும். குறிப்பாக இளைய சமூகம் இதற்கு வேகமாக ஆட்படும் அபாயம் மேற்குலகில் அதிகம் உள்ளது.

இதை எவ்வாறு மாற்றியமைக்கலாம் ? எது மகிழ்ச்சியைக் கொடுக்கும் ? எனக் கேட்டால், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் ஞானியர் தேடியதற்கான காரணம் என்ன?என்பது புரியும். அப்படியானால் ஞானமார்க்கத்தைத் தேடினால்தான் மகிழ்ச்சி கிடைக்குமா? . இல்லை சோகங்களை அழித்தால் மகிழ்ச்சி பிறக்கும். எப்படிச் சோகங்களை அழிப்பது.

கவிப்பேரரசு வைரமுத்து ஒரு சினிமாப்பாடலில் " உன் கண்ணால் பிறர்கழுதால் ஆனந்தம் " எனப் பாடுவார். பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் அவ்வாறு வாழ்ந்தவர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் மக்களை நோக்கி ஒரு ஜோக் ஒன்றை சொன்னார். அரங்கமே சிரித்து அதிர்ந்தது. மீண்டும் அதே ஜோக்கை 2ம் முறை சொன்னார், அரங்கில் பாதிப் பேர் சிரித்தனர். 3வது முறையும் அதே ஜோக்கை சொன்னபோது அரங்கம் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் சாப்ளின் மக்களை நோக்கி சொன்னார், ஒரு சிறிய ஜோக் முதலில் உங்களை சிரிக்க வைத்தது. 2வது முறையும் ஏற்கனவே சொன்னது தானே என்று பெரிதாய் ஏற்றுக்கொண்டு சிரிக்கவில்லை. அப்படியிருக்க சோகம் ஒன்றுதானே? அதைமட்டும் ஏன் திரும்பத் திரும்ப ஏற்றுக்கொள்கிறீர்கள்? சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள் என்றார்.

தினசரி நம் வாழ்வில் எவ்வளவு மன நிறைவுடன் இருக்கிறோம், நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியையும் உணரமுடியும். வாழ்வில் சுறுசுறுப்பு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான மனநிலை, சுகாதாரமான சுற்றுப்புறம், நகைச்சுவை உணர்வு, உண்மையான உறவுகள், அளவான செல்வம், பிறர் நலம் பேணுதல், போன்ற எல்லா காரணிகளும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. அப்படியான மகிழ்ச்சிதனை தன் வாழ்வில் பெறுவது மற்றுமின்றி பிறரையும் மகிழ்விப்பதுதான் மகிழ்வின் உச்சமே.

ஒரு சிறிய பூங்கன்றினை கவனமாக வளர்த்துப் பாருங்கள், அது மகிழ்ச்சியைத் தரும். அழகான பாடலை அனுபவித்துக் கேட்டுப்பாருங்கள் அது மகிழ்ச்சியைத் தரும். தினமும் ஒரு சில நிமிடங்களாவது ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள் அளவற்ற மகிழ்ச்சி தரும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு, நேர்மறையாக யோசிக்கப் பழகுங்கள் நிறைவான மகிழ்ச்சி தரும். பிடித்தமான ஒரு வேலையைத் தொடர்ந்து செய்வதில் இன்பங் காணலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என எண்ணப் பழகுங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். எண்ணம்தான் வாழ்க்கை !

இன்று உலக கதை சொல்லும் நாள், கதைகள்..

இன்று உலக சிட்டுக் குருவி தினம்

அனைவர்க்கும் சர்வேதேச மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.