முற்றம்

"சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே.. " ஶ்ரீதரின் இயக்கத்தில், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகளை, பி. சுசீலா பாடிய பாடல் என்பதெல்லாம் பின்னாளில் நான் தெரிந்து கொண்டது.

ஆனால் இந்தப்பாடலை முதலில் அறிந்து கொண்டது எனக்கு, எண்ணும், எழுத்தும் கற்பித்த ஆசிரியைகள் கமலாதேவியும், கெங்காம்பியையும் இனைந்து பாடும்  போது. அப்பொழுது முதல் சுசீலாவை விட அவர்கள் இருவரும்தான் அந்தப்பாடலை மிகவும் ரசித்துப்பாடுவதாக நினைத்துக் கொள்வேன். அந்த நினைப்பினை மாற்றிவிட்டாள் ஒரு 12 வயதுச் சிறுமி.

பாடலை அனுஅனுவாக ரசிக்க சுபஶ்ரீ தனிகாசலத்திடம் பயிற்சி எடுக்க வேண்டும். தமிழ்த்திரையிசை குறித்து, அத்துனை நுட்பமும், திறனும் அறிந்தவர். அவர் தமிழ் தொலைக்காட்சிகளில் இசைக்கான ரியால்டி ஷோக்களின் தொடக்கமாக இருந்த "சப்தஸ்வரங்கள்" நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தது முதல் இந்தக் கொரோனாக் காலம் வரை பல குரல்களைத் தமிழிசை உலகுக்கு அழைத்து வந்து அடையாளங் காட்டுகின்றார்.

தமிழகத்தில் கொரோனா பெருமுடக்கம் அறிவித்த போது, சமூகவலைத்தளங்களில், அவர் தொடக்கிய இசைப்பயணம் QFR . இதனைப் பொதுமக்கள் அனுசரனை நிகழ்ச்சியாக மாற்றி, 300 வது எபிசொட்டினையும், ஒராண்டு காலத்தினையும் எட்டப் போகின்ற அந்த நிகழ்ச்சியில், அவர் அறிமுகம் செய்யும் கலைஞர்களும், பாடல்களும், தனித்துவமானவை. அதற்காக அவர் கொடுக்கும் அறிமுகங்களில் சுபஶ்ரீயின் அபாரமான ஞாபகசக்தியும், திறமையும் வெளிப்படும்.

அந்த நிகழ்ச்சியின் 274 பகுதியில், இலண்டனில் பிறந்து வளர்ந்த, தமிழ்மொழியில் பேசவும் தெரியாத 12 வயதுப்பெண் இலக்சுமி, " சொன்னதும் நீதானா..." பாடலைப் பாடியிருக்கும் விதம் அத்துனை அற்புதமானது. பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட, பாடகிகள், ஷ்ரேயா கோஷல், விபாவாகரி ஜோஷி, போல் அதிசயிக்கத் தக்கவகையில் அழகான மொழி உச்சரிப்போடு பாடுகின்றாள் இலக்சுமி. அந்தத் திறனில்லாவிடின் சுபஶ்ரீயின் தனித்துவத் தேர்வுக்குள் நிச்சயம் இலக்சுமி வந்திருக்க முடியாது.

இப்போது "சொன்னது நீதானா சொல் சொல்.." என்றாள் நினைவுக்கு வருகிறாள் 12 வயது இலக்சுமி. கானொலியை நீங்களும் பாருங்கள். பாடுவது இலக்சுமிதானா..? என நிச்சயம் கேட்பீர்கள்.


- மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.