முற்றம்

இலங்கை தமிழ் நாடக துறையின் இமயமாக திகழ்ந்த மரியசேவியர் அடிகளாரின் மறைவு, கலைத்துறைக்கும், கலாரசிகர்களுக்கும், பேரிழப்பாகும்.

பன்மொழிப்புலமையும் ஆளுமையும் கொண்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியில் ஈடுபட்டவர். திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பினைக் கலைகளுக்காக அமைத்து பெரும் பணி செய்தவர்.

நாடக துறையில் ஈடுபாடு குறைந்தவர்களை கூட நாடகம் பார்க்க தூண்டியவர் அடிகளார். அவரது கலைப்பயணமும் பணியும் கண்டு வியந்து போயிருக்கிறேன்.

கலைமுகம் சஞ்சிகை வெளியீடு, நாடக ஆற்றுகைகள், பன்முக கலை வளர்ச்சிப்பணிகள் என்று அடிகளாரின் ஆளுமை வெளிப்பாடு பெரியது. ஒரு பன்னாட்டு தமிழ் கலை குடும்ப தந்தையாக அவர் காணப்பட்டார். முக்கியமாக நூற்றுக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கி, போர் சூழலில் மக்களுக்கு மன அமைதி தரும் ஆற்றுகைகளை வழங்கியமை சிறப்பானது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவர் இவர். ஆனால், நாடக துறையில் எந்த பட்டப்படிப்பும் மேற்கொள்ளாதவர். ஆனால் நாடகம் தொடர்பில் பெரும் மறுமலர்ச்சி செய்தவர்.அன்னாரின் இழப்பு இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் ஆன்மா இறைநிலையில் அமைதிப் பெறப் பிரார்த்திப்போம் !

- தியாக. மயூரகிரிக்குருக்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.