முற்றம்

செல்வம் கொழிக்கும் தீபாவளியாக நாம் கொண்டாடும் தீபாவளித் திருநாள் விளங்க, எண்ணெய் ஸ்நானமும், தாம்பூலம், தட்ஷனை வழங்குவதும் சிறந்த வழிமுறை என்று சிறு கதை மூலம் நமக்கு விளக்குகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த எஸ்.ராகவன் 

முதலில் ராகவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். 26 வயதாகும் மயிலாடுதுறையில் பிறந்த ராகவன், மதுராவில் பிறந்த கிருஷ்ணன் போன்று இரு பெண்மணிகளால் நான் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவன் என்று பெருமையோடு கூறுகிறார்.

தாயின் பெயர் சாந்தி, தந்தை பெயர் சேகர். என்றாலும் காமாக்ஷி மாமியும் எனக்கு தாய் போன்றவர்தான். அவரும் என்னை மகன்போல வளர்த்தார். உபன்யாசம் செய்வதுக் குறித்து, எனது தாய் மற்றும் காமாக்ஷி தாய் மூலம் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டேன் என்று கூறுகிறார் ராகவன்.  

எனக்கு இஷ்ட தெய்வம் என்று பார்த்தால் அம்பாள்தான். ஆனால், அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் உபன்யாசம் செய்ய ஆர்வமுண்டு. உபன்யாசம் என்பது எப்படி சுவைபட செய்ய வேண்டும் என்று எனக்கு குருவாக இருந்து சொல்லித் தந்தது வி.கிரி மாமா என்கிறார் ராகவன். சிருங்கேரி மடத்துக்கு ஷண்டி ஹோமம் செய்யும் மிக முக்கியஸ்தரான தினகர ஷர்மா தமக்கு அம்பாள் மந்த்ரத்தை எடுத்துத்தந்ததாகவும் கூறுகிறார்.தங்களது அக்ரஹாரத்தில் நடக்கும் ராதா கல்யாணங்களில் 18 வருடங்களாக ராதா கல்யாணம் உபன்யாசம் செய்துள்ளதாக கூறுகிறார் ராகவன். தமிழகம் முழுவதிலும் சிருங்கேரி மடம், கோயில் என்று இதுவரை 40 உபன்யாசங்கள் செய்திருப்பதாக கூறும் ராகவன் சென்னை Tcs-ல் வேலைப்பார்க்கும் ஒரு மென்பொறியாளர்.இவருடன் பிறந்தவர ஒரு சகோதரன். இவரது பெயர் கிஷோர். இவருக்கு உபன்யாசத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். பிற்காலத்தில் வேணுகுடி கிருஷ்ணன் போல பெரிய உபன்யாசகர் ஆக வேண்டும் என்போதுதான் ராகவனின்  எதிர்கால ஆசையாம்.  இப்போது இவர் செல்வம் கொழிக்க தீபாவளியை எப்படி பூஜை செய்து கொண்டாடலாம் என்று கூறி உள்ளதை பாப்போம்.   தீபாவளியன்று எண்ணை தேய்த்து ஸ்நானம் செய்வதால் வரும் பலனை பற்றி பிரஹ்ம வைவர்த்த புராணம் அழகாக கூறுகிறது.

வயதான ஒரு அந்தண தம்பதி காவேரி தீரத்தில் வசிக்கிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள் அத்தம்பதியில் கணவனுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. வைத்தியரை அழைத்து காரணத்தைக் கேட்க அவரோ நீண்ட நாள் எண்ணை ஸ்நானம் செய்யாததால் உடலில் உஷ்ணம் அதிகமாகி வயிற்று வலி ஏற்பட்டது என்று கூறினார். உடனே மறுநாள் அதிகாலை தீபாவளி அன்று அதனுடைய மஹிமை தெரியாமலே எண்ணை ஸ்நானம் செய்கின்றனர். பிறகு அந்த வைத்தியருக்கு தாம்பூலத்தோடு தக்ஷினையும் வைத்து கொடுகின்றனர். அதன் பயனாக அவர்கள் வாழ்நாள் இறுதி வரை அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற்று இறுதியில் விஷ்ணு பகவானின் திருவடி நிழலையும் அடைந்தார்கள்.  

ஒரு எண்ணை வியாபாரி தீபாவளி அன்று முதல் நாள் சதுர்தஸி திதி அன்று இரவு முழுவதும் எண்ணை வியாபாரம் செய்து வருகிறான். எண்ணை குடத்தில் கசிவு ஏற்பட்டு அதன் கசகசப்பு தாங்காது காவேரியின் மஹிமையோ தீபாவளியின் பெருமையோ அறியாது அன்று சூரியன் உதிக்கும் முன்பு காவேரியில் நீராடுகின்றான். பின்பு அங்கு வந்த ஒரு வேதம் படித்த அந்தணருக்கு தாம்பூலமும் தக்ஷினையும் வைத்து அவரை நமஸ்காரம் செய்கிறான். அதன் பயனாக அவனும் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற்று இறுதியில் விஷ்ணு பகவானின் திருவடி நிழலையும் அடைகிறான்.  

தீபாவளியின் மஹிமை தெரியாமலே அன்று சூரியன் உதிக்கும் முன்பு எண்ணை ஸ்நானம் செய்தால் இவ்வளவு பலன் என்றால் அதன் மஹிமை தெரிந்து அனுஷ்டித்தால் இவ்வளவு பலன் என்று சொல்லவும் முடியாது.  

காசி அன்னபூரணியின் தீபாவளி : அனைத்து பண்டிகைகளை விடவும் காசியில் தீபாவளி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்னபூர்ணா தேவி சந்நிதியில் மிகவும் ஸாநித்யம் உள்ள ஸ்ரீ சக்ரம் உள்ளது. இந்த அன்னபூர்ணா தேவியை தீபாவளி அன்று தரிசனம் செய்வதே மிகவும் விஷேஷம். ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள். உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.அங்கு தீபாவளி அன்று லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள்.   கூடவே,அன்னபூர்ணா தேவி தன் பக்தனின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதம்:உங்களுக்காக இங்கு கூறுகிறேன்.  

நாராயண தீக்ஷிதர் தேவி உபாசகர். அம்பிகயிந் மீது அபரிமிதமான பக்தி உடையவர். ஒரு நாள் 108 துறவிகளுக்கு அன்னம் அளிக்க வேண்டி அவர்கள் எல்லோரையும் தன் இல்லம் அழைத்தார். வீட்டிற்கு வந்தால் மனைவி வீட்டு விலக்கு. என்ன செய்வதென்று புரியாது அம்பிகையை பிரார்த்தித்தார்.  

திடீர் என்று வாசல் கதவை தட்டும் சப்தம். ஒரு சுமங்கலி " ஐயா இங்கு துறவிகளுக்கு அன்ன தானம் என்று கேள்வி பட்டேன். என்னால் முடிந்த உதவி செய்து அந்த புண்ணியத்தில் பங்கு பெறவே வந்துள்ளேன்" என்று கூற தீக்ஷிதருக்கு ஆனந்தம். இது சாக்ஷாத் அம்பிகையின் அருள் என்று எண்ணி அப்பெண்ணை நமஸ்கரித்து அவளை அன்னம் சமைக்கும் படி கூறினார்.  

அவளும் சம்மதித்து எல்லா துறவிகளுக்கும் தானே சமைத்தாள். அனைத்து துறவிகளும் ஆனந்ததொடு உண்டனர். அனைவரும் மிக மகிழ்ச்சியோடு நாராயணரை வாழ்த்தி விடை பெற்று சென்றனர்.  

அந்த சுமங்கலியும் விடைபெற்று சென்ற பின்பு தான், வந்தது யார் என தெரியாமலே தாம்பூலம் கூட கொடுக்காமல் ஒரு சுவாஸினியை அனுப்பியது தீக்ஷ்தர்க்கு உரைத்தது. காசி முழுக்க தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை. அன்று இரவு அவரது கனவில் சாக்ஷாத் பகவதி அன்னபூர்ணா தேவி தோன்றி வந்தது தானே என்று உணர்த்தி தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறினாள். அம்பிகையின் அருளை நினைத்து மிகவும் பக்தியோடும் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தொடும் தன் பாக்கியத்தை எண்ணி அம்பிகைக்கு ஒரு கோவில் காசியில் காட்டினார். புராதனமான அன்னபூர்ணா தேவி கோவிலை தவிர்த்து இன்றும் நாராயனர் கட்டிய அன்னபூர்ணா தேவி ஆலயம் இன்றும் உள்ளது.  

எனவே, காசியில் தீபாவளி மிகவும் விசேஷமாக அன்னபூரணி அன்னையைத் துதித்து கொண்டாடப்படுகிறது. இதனால் வீட்டில் செலவம் கொழிக்கும், அன்னத்துக்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது. அனைவராலும் காசிக்கு தீபாவளிக்கு செல்வது இயலாது அல்லவா?. ஆகையால் தீபாவளி அன்று இந்த துதியை சொல்லி துதிப்போம்.  

"அன்னபூர்ணாம் பராம் அம்பாம் அகிலாண்டஸ்ய நாயிகாம் காசிபுரி நிலயாம் வந்தே கைவல்ய தாயினீம் சிவாம்"  

செல்வ வளம் பெறுவோம்.நீங்கள் இல்லங்களில் எண்ணெய் ஸ்நானம் செய்து, பட்சணங்களை வைத்து அன்னபூரணி துதி சொல்லி வணங்கி, அன்று சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து, முடிந்தால் அன்னதானமும் செய்து வழிபாட்டால், வீட்டில் செல்வம் கொழிக்கும். இந்த தீபாவளி உங்களுக்கு செல்வம் கொழிக்கும் தீபாவளியாக மாறட்டும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : எழில்செல்வி

 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.