முற்றம்

சிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், இறுதிக் கட்டத்தை எட்டிய போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிகளுக்கு அச்சம்/அழுத்தம்/உயிராபத்து காரணமாக அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய போது அந்த இனப்படுகொலைகள் நடந்தேறின. 

இன்று சிரியாவின் கிழக்கு அலெப்போ அதே ஆபத்தில் சிக்கியிருக்கிறது. சிரிய அரச இராணுவம், ரஷ்ய படைகளின் உதவியுடன் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி கிழக்கு அலெப்போவை சுற்றிவளைத்துள்ளது. அரசை எதிர்த்து போராடும் சிரிய கிளர்ச்சிக் குழுக்களின் இறுதி மிகப்பெரும் நம்பிக்கை அந்த கிழக்கு அலெப்போவை தக்கவைத்திருப்பது. மறுபுறம் துருக்கி ஆதரவு குர்ஷிஷ் படைகளிடம் வடக்கு அலெப்போவின் வடக்குப் பகுதி.  இவை அனைத்திற்கும் நடுவே ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்களாக சுமார் 100,000 ற்கு மேல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த வாரத் தொடக்கத்தில் சிரிய இராணுவ அங்கு ஏவுகணை தாக்குதல்களையும் தரைவழித்தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது. கிழக்கு அலெப்போவை ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாக துண்டித்து சுற்றிவளைத்துக் கொண்டது. நிலமை கைமீறிப்போவதை அறிந்த  கிளர்ச்சிப் படைகளுக்கு அங்கியிருந்து எப்படி வெளியேறுவது என்பது தெரியவில்லை. 

 பொதுமக்களை புறந்தள்ளி, அங்கு கிளர்ச்சிப் படையினரை முற்றாக அழித்தொழிக்க இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறது சிரிய அரச படை.  ஆனால் பொதுமக்களின் நிலை? கிழக்கு அலெப்போவில் உள்ள இளைஞர்கள் கடந்த இரு தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் Last Goodbyes எனும் பெயரில் சில காணொளிகளை வெளியிட்டனர்.

 சர்வதேச சமூகத்தை நம்பாதீர்கள். ஐ.நாவை நம்பாதீர்கள். சிரிய அரச படைகளை நம்பாதீர்கள். கிளர்ச்சிக் குழுக்களையும் நம்பாதீர்கள். இன்னமும் ஒரு சில தினங்களுக்குள் இங்கு அகப்பட்டிருக்கும் 50,000 ற்கு மேற்பட்டவர்களின் சடலங்களை கூட உங்களால் பார்க்க இயலாது போகும். எம்மை இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணில் மிகப்பெரும்  மனித இனப்படுகொலையொன்று நிகழப் போகிறது. நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, இராணுவத்தினர் அல்ல, கிளர்ச்சிப் படைகள் அல்ல. மனிதர்கள், பொதுமக்கள். இந்நாட்டின் சுதந்திரத்தை நேசிப்பவர்கள். இனி எமது முடிவு உங்கள் கைகளில் என்கின்றன அக்காணொளிகள். 

«எனது நெருங்கிய நண்பர்களுடன் இனப்படுகொலைகளுக்குள் உயிர்துறக்கப் போகிறேன்.  அதை நேரடியாக உங்களுக்கு காண்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன். இன்னமும் சில மணி நேரங்களில்» என்கிறது மிக உருக்கமான ஒரு டுவிட். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது  இக்கதறல்கள், சர்வதேசத்தின் காதுகளில் பெரிதாக கேட்கவில்லை. மறுபடியும் அதே போன்று ஒரு தவறு, தெரிந்தே ஒரு இனப்படுகொலை நடந்தேறப் போகிறதா எனும் அச்சத்தில் இருக்கும் போது இன்றைய காலை செய்திகள் இப்படிக் கூறுகின்றன. 

«கிழக்கு சிரியாவை விட்டு வெளியேற நினைக்கும் எவருக்கும், அவர்கள் போராளிகளோ, பொதுமக்களோ உயிர் உத்தரவாதம் அளிக்கப்படும்». இதையடுத்து சர்வதேச செஞ்சிலுவை நிலையத்தின் உதவியுடன்  கிழக்கு அலெப்போவிலிருந்து, 8 கி.மீ தூரத்தில் உள்ள அடுத்த  கிளர்ச்சிப் படைகளின் நகரத்தை நோக்கி பொதுமக்களுடன் போராளிகளும் நகரத் தொடங்கியுள்ளனர். 

ஆனால் இந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது மறுபடியும் இடம்பெறத் தொடங்கும் தாக்குதல்கள். அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறுகிறது. இதைத் தடுக்க உங்களால் உடனடியாக இரு விடயங்களை செய்ய முடியும். 

அலெப்போ இனப்படுகொலையை தடுக்கக் கோரும் அல்லது, போர்க்குற்றங்களுக்கு சாட்சி கூறத் தயாராக இருக்கிறோம் எனும் Medecins du monde அமைப்பின் விண்ணப்ப கோரிக்கையில் நீங்களும் கையொப்பம் இடலாம். 

 http://www.medecinsdumonde.org/fr/pays/moyen-orient/petition-syrie-0

அதோடு சரணடையும் போராளிகள் அல்லது அவர்களது குடும்பங்களை சித்திரவதை செய்ய அரச படைகள் முனையக் கூடாது. அதனை ஐ.நாவின் கண்காணிப்பாளர்கள் நேரடியாக உறுதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனும் சர்வதேச மன்னிப்பு சபையின் விண்ணப்ப கோரிக்கையிலும் நீங்கள் கையொப்பம் இடலாம். 

https://www.amnesty.org/en/get-involved/take-action/demand-safe-evacuation-of-people-from-east-aleppo/

#StandWithAleppo  எனும் இத்தகவலையும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.