முற்றம்

தூய்மைவாதத் துணைகொண்டு வரும் இனப் பாகுபாடு என்றெண்ணத் தோன்றும் வகையான சட்ட உருவாக்கத்திற்கு ஆதரவு கோரும் மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் இவ்வார இறுதியில், ( 28.02.2016) வெளியாகும்.

இதற்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இப்போது நடைபெறுகின்ற. வார இறுதியில் நேரடி வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.

சுவிற்சர்லாந்தில், வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் கோஷங்கள் திடிரென எழுந்தவையல்ல. காலத்துக்குக் காலம் அத எழுப்பட்டவைதான். ஆனால் இப்போதெழுந்திருப்பது ஒரு ஆழிப்பேரலை போன்றது.

பெரும்பாண்மையாக யுத்தங்கள்,  இயற்கைப் பேரிடர்கள் என்பவற்றால் அகதிகள்உருவாகின்றார்கள்.  அவர்களில் பெரும்பாலும் இடப்பெயர்வினை மேற்கொள்பவர்கள் யுத்தநிலங்களின் அகதிகளே.  இயற்கைப் பேரிடர்களால் உருவாகும் அகதிகள் மீளவும் தங்களது நிலங்களிலேயே தமது வாழ்வினை மீளமைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் யுத்த நிலங்களின் மக்களே புலம்பெயரும் அகதிகளாகின்றனர்.  அத உயிர்வாழ்தலுக்கான ஒரு ஓட்டமே. அகதிகளின் இடப் பெயர்வினை நிறுத்த வேண்டுமாயின், முதலில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டியது யுத்த நிறுத்தங்களும், யுத்தங்களுக்கான ஆயுதத் தளபாட உற்பத்திகளும், அவற்றின் சந்தைப் பரிவர்த்தனையும். ஆனால் அவைகளில் தூய்மையான சிந்தனையையும்,  திறந்த செயற்பாட்டினையும், வைக்கத் துணியாத மேற்குலகம், அகதிகளின் இடப்பெயர்வினை மட்டும் கட்டுப்படுத்த விரும்புகிறது. இவ்வகையான செயற்பாட்டின் மூலம் இவர்கள் ஏமாற்ற விளைவது,  வெளிநாட்டவர்களை மட்டுமல்ல, தமது சொந்த மக்களையும்தான்.

அன்மைக்காலத்தில் யுத்தங்கள் காரணமாக அதிகரித்திருக்கும் அகதிகள் வருகை,  பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலை,  அதிகரித்து வரும் வேலையின்மை, எனப் பல்வேறு நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளை அச்சங் கொள்ளச் செய்துள்ளன. இவ்வாறான நெருக்கடிகளுக்கான காரணிகள் வெவ்வேறானவையாக இருப்பினும், வெளிநாட்டவர் வருகையே பிரதானமானது என்பதான கருத்தாக்கம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவெங்கிலும் உருவாகியுள்ள இக்கருத்தாக்கத்திற்குச் சுவிற்சர்லாந்தும் விதிவிலக்கானதல்ல. அதேபோல் ஐரோப்பாவெங்கிலும் எழுதுள்ள இந்நெருக்கடிகளை சிறிய நாடான சுவிற்சர்லாந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே,  குற்றம் செய்த வெளிநாட்டினர்களை நாடுகடத்துவது தொடர்பான புதிய சட்டத்திற்கான மக்கள் கருத்துக் கணிப்பு நடைபெறுகிறது.  இந்த வாக்கெடுப்பு வெற்றி கண்டு, சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டால் வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.  இதனை மோசமான மனித உரிமை மீறலாகக் கருத முடியும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

சுவிற்சர்லாந்தின் அரசியல் மட்டத்திலும்,  சட்டத்துறை சார்ந்தும், இதற்கக் கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ள போதும்,  இது சுவிற்சர்லாந்தின் தனித்துவத்துவத்திற்குத் தேவையானதும், அத்தியாவசியமானதும் என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறது UDC கட்சி.  இந்தத் தூய்மைவாத சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலேயே அது தனது பரப்புரைப் பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் வெளியிட்டு வருகிறது.

இவ்வாறான பரப்புரையையும், கருத்தாக்கத்தையும், அக் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.  அவை காலத்துக் காலம் சுவிஸ் மக்களால் முறியடிக்கபட்டும் வந்திருக்கிறது. ஆனாலும் அண்மைக்காலத் தேர்தல்களில் அக் கட்சி பெற்றிருக்கு வெற்றி, சுவிஸ் மக்களின் மாறி வரும் மனநிலையின் வெளிப்பாடோ என அச்சங்கொள்ளக் கூடிய தருணமொன்றில் இப்போதைய வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.  ஆதலால் வெளிநாட்டவர்களுக்குப் பாதிப்புக்களைத் தரக் கூடிய இச் சட்டத்திற்கான எதிர்வாக்குக்களைச் செலுத்த வேண்டி முக்கியமானவர்கள் சுவிற்சர்லாந்தின் பிரஜா உரிமை பெற்ற வெளிநாட்டவர்கள்.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் பொது வாக்கெடுப்புக்களில், பிரஜா உரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்து வருகிறது.  சுமார் 10 ஆயிரம் பிரஜா உரிமைபெற்றுள்ள தமிழர்கள், தங்களது வாக்கினைத் தவறாது, குற்றம் செய்த வெளிநாட்டினர்களை நாடுகடத்துவது தொடர்பான இச் சட்டவாக்கத்திற்கு எதிராக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.   அதனைத் தவறவிட்டு, குற்றம் செய்தவர்களுக்கு எதிரானதுதானே. அது நமக்கில்லைத்தானே எனக் காணாது சென்றால், நாளை அது நமது வீட்டின் கதவினையும் தட்டக் கூடும்... ஏனெனில் ஆரம்பத்தில் சொன்னது போல் அது ஓர் ஆழிப் பேரலை போன்றது. யாரையும் இழுத்துச் செல்லக் கூடும். ஆதலால் No என வாக்களித்துத் தோற்கடிக்க வேண்டும்.

 

- 4தமிழ்மீடியாவிற்காக : நாகன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.