முற்றம்
Typography

கொத்துக் கொத்தாய் கடல் காவுகொள்ளும் அகதிகளின் உயிர்களைப் பற்றி இதுவரை கவலைப்படாத எந்தவொரு அரசியல் தலைவர்களையும், அய்லானின் (Aylan) புகைப்படமாவது அசைத்துவிட முயற்சித்தால், அதை அச்சாணியாய் பிடித்துக் கொண்டு அதன் பின்னாள் உலகம் திரள்வதில் தப்பில்லை.

 வியட்நாம் கொடுமைக்கு ஒரு நிர்வாண சிறுமியின் புகைப்படம். ஆபிரிக்காவின் வறுமையை தோலுரித்துக் காட்டிய ஒரு புகைபப்டம். Je suis Charlie எழுத்துக்களுடன் ஒரு புகைப்படம் இதே போன்று, உலகை உயிர்க்கச் செய்துள்ளது, இக்குழந்தையின் மூச்சிழிந்த புகைப்படம்.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் தப்பி ஐரோப்பாவுக்கு அகதியாக இடம்பெயர முயன்ற போது படகு விபத்தில் சிக்கி கடலில் மூச்சுத் திணறிப் பலியான ஒரு கைக் குழந்தை துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கி இருந்த நிலையில் உயிரிழந்த அக்குழந்தையின் சடலத்தை துருக்கி எல்லைக் காவற் படை வீரர் ஒருவர் கையில் ஏந்திச் செல்லும் புகைப்படம் அண்மையில் இணையத்தின் ஊடாகவும், செய்தித்தாள்கள் ஊடாகவும் செலுத்திய மிகப்பெரும் தாக்கம் இது.

ஆஸ்திரிய எல்லையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சரக்கு லாரிக்குள் இருந்து வெளிவர முடியாது, மூச்சுத் திணறி இறந்த 71 அகதிகளின் சடலங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஆஸ்திரியாவில் 40000 பொதுமக்கள் ஒன்று கூடி அகதிகளுக்கு ஆதரவாக பிரமாண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது மிக அண்மையச் செய்தி. அச்சூடு ஆறுவதற்குள், அடுத்த சம்பவம். இச்சிரிய சின்னஞ்சிறு சிறுவனது.

Aylan Kurdi எனும் இச்சிறுவனுக்கு மூன்று வயது. இவனது 5 வயது சகோதரனுடமும், தனது தாய், தந்தையுடனும் சிரியாவிலிருந்து துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்து கனடாவில் இருக்கும் தனது உறவினரை சென்றடவைதற்காக அகதிகளாக புறப்பட்டார்கள் படகில்.

கண் முன்னே, தன் கைகளிலிருந்து இரு பிள்ளைகளைகளும் கடலில் நழுவிப் போனதையும், தன் அருகேயே தனது மனைவி உயிரிழந்தையும் துருக்கியை வந்தடைந்த போதே அத்தந்தையார் மனமுடைந்து ஊடகமொன்றுக்கு கண்ணீருடன் தெரிவிக்கிறார். அத்தருணமே Aylanin சடலம் தனியாக கடற்கரையில் ஒதுங்கிய படி கண்டெடுக்கப்பட்டு துருக்கி எல்லை காவற்படை வீரர் ஒருவர் கையில் ஏந்திச் செல்கிறார். அதனையொட்டிய புகைப்படங்களே இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியிருந்தன.

டுவிட்டர், பேஸ்புக் வழியாக உலகின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் ஓவியர்கள், கலைஞர்கள் பகிர்ந்து கொள்ளும் ஆய்லனின் ஓவியப் புகைப்படங்கள் இவை.

2.

 

15.

பகிர்ந்து கொள்வதற்கு #KiyiyaVarunInsanlik #HumanityWashedAshore எனும் ஹேஷ்டேக்களை நீங்களும் பயன்படுத்துங்கள். அகதிகள் விடிவுக்காக உலகம் மீண்டும் ஒரு முறை விழித்துக் கொள்ளட்டும். அதில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டுமே!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்