முற்றம்

எங்கே போனாவோ அருந்தா வருவா பிறகு கொஞ்ச நாளைக்கு காணாமல் போவா. திடீரென்று வந்து கதை விடுவா. என்று நினைக்கிறீர்களா. அதுதான் நான் முற்றத்தில் இருந்து கதைப்பம் எண்டு வந்தன்.

எங்கட வீட்டு முற்றத்தில் இருந்து கதைக்கிறதெண்டாலும் முற்றமும் கிடையாது. நேரமும் கிடைக்காது. ஆர் வாரியள் இப்ப கதைக்க, என்ன பகுடி என்டால் இப்ப ஆரையும் முற்றத்திலும் காணோம். வளவிலும் காணோம். இப்ப எல்லாரும் குளீரூட்டி அறையில் இருந்து முகப் பக்கத்தில் கணனியில் வலை பின்னிக்கொண்டு இருப்பியள். அப்ப நானும் சரி எண்டு இந்த வலைமுற்றத்தில் கதைக்க வந்தனான். நீட்டி முழக்கி நேரத்தை வீணாக்காமல் விசயத்தை சொல்லும் என்று சொல்லுவது கேட்கிறது. 

இந்த முற்றத்தில் நிறையக் கதைக்க ஏலாது என்டாலும் சுருக்கம்மொ சுருக்கம் என்று சொல்ல பார்க்கிறன். அது என்னன்டால் எல்லாருக்கும் அடிப்படையாய் தேவை; உணவு, உடை, இருப்பிடம். உணவும் உடையும் கிடைச்சிடும் பாருங்கோ, இருக்க ஒருவீடு அதுதான் பெரும்பாடாய் படுத்தும் விசயம், அது வாடகை என்டாலும் சொந்தமெண்டாலும் இருக்கவேண்டியது அவசியம்.

"இ.பெ.மு; இ.பெ.பி" என்ன பி பீ யை அதுதான் இரத்த அழுத்தம் ஏறுற மாதிரி இருக்கோ! அது பாருங்கோ, இ பெ மு என்டால் இடப்பெயர்வுக்கு முன்; இ பெ பி என்டால் இடப்பெயர்வுக்கு பின். இப்படி தமிழர் எல்லாருக்கும் ஒரு நிலை வந்ததுதானே. அதுல மாட்டிக்கொண்ட ஒரு தமிழ் பிரதிநிதிதான் நானும். எனக்கும் இந்த சங்கடங்கள் சஞ்சலங்கள் எல்லாம் அத்துபடி அப்படி மாட்டித்தவிக்கும் நிலை ஈழத்தமிழருக்கு ஏற்பட வந்ததே போரெனும் பெருவெள்ளம். அதில்மூழ்கி மூர்ச்சித்தோர் எத்தனை, மூழ்கித் தவித்தோர் எத்தனை. அரை உயிரும் காவுயிருமாய் தத்தளித்தோர் எத்தனை, பொட்டிழந்து,  பொருள் இழந்து வாழ்விழந்து, அறிவிழந்து, காலிழந்து, கையிழந்து, கண்ணிழந்து, வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, இருக்க வீடின்றி நிற்கின்றனர்.

கற்க புத்தகம் இன்றி கற்பதற்கு மூளை தெளிவின்றி மனநலம் குன்றி, எதிர்காலத்தின் நிலை எண்ணி ஏங்கி ஒரு பயமும் பதட்டத்துடனும் எவ்வாறு வாழ்வது எங்கு வாழ்வது என்னசெய்வது என்று தெரியாமல் முகாமில் முடங்கிக் கிடக்கின்றனர்.

வாழ்வே சிறையாய் அடைபட்டு இரும்புக்கம்பிக்குள் வெளி உலகே தெரியாது, அதுவே வீடாய் ஏங்கித்தவிப்பவர் பலர். சந்தேகத்தில் கைதானவர்கள், போர்யுத்த வெள்ளத்தில் மூழ்கி எழும் போது பிடிபட்டோர், எமது குடும்பம் எப்படித்தவிக்கின்றதோ, சாப்பிடுகிறார்களா, வீடுவசதி இருக்கா, படிக்கிறாரா, நிம்மதியுடன் வாழ்கிறாரா, எனத்தவிப்பது எப்போதாவது யாருக்காகவது செவிகளில் விழாதா காணமாட்டார்களா, நாம் காணாமலே போய்விடுவோமா என்று புலம்புவது என் மனக்கண்ணில் தெரியுது. என்ன செய்வது. தமிழராய் பிறந்த பாவம் பலருக்கு சிறையே வீடாய், பலருக்கு முகாமே வீடாய்,  தெருவே வீடாய் இப்படி ஆச்சு.

இன்னும் பலருக்கு இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழ்வோம் என்று போய் கம்பியில் வாழ்க்கையாய் அது என்ன கம்பி வாழ்க்கை. கம்பியை இரு பக்கமும் நிறுத்தி அதில் கம்பியைப் பொருத்தி உயரத்தில் அதில் பாரும், அதை ஒரு தொங்கலில் இருந்து மறுபக்கம் வரை கீழே விழுந்திடாமல் நடந்து வந்தியள் எண்டால் செல்வம் நிதி பெருகும் அவ்வளவு அவதானத்தோட வாழ்க்கை வாழ பழகிக்  கொண்டு வாழ்ந்தியள் என்டால் அவயளை யாரும் பணத்தில மிஞ்ச எலாது என்று சொல்றன். உங்களுக்கு இப்ப நல்லா விளங்கும். அந்த கம்பியில் இருந்து கீழே விழுந்திடாமல் பக்குவமாக காலடி எடுத்து  வைத்துக் கொண்டு போனால் சலிக்காது. வாழ்வில் பொருளும் கிடைக்கும். இல்லாவிட்டால் பல வலிகளைத்தாங்கித்தான் அங்கும் வாழ்க்கை பணம் பதவி எல்லாம் கிடைக்கும்.

ஆனாலும். இ பெ; பி என்று யுத்தவெள்ளம் வடிஞ்சிட்டுது, என்டுதான், கனபேர் வருகினம். நிலபுலன்கள் எல்லையில்லாமலும், கண்ணி வெடியுள்ளதாயும் கண்டு பிடிக்கினம். ஆனால் புதையல் கனக்கக்  கிடைக்குது. என்ன தங்கக் காசுகளோ என்டு கேட்டுப் போடாதையுங்கோ. மண்டையோடும், எலும்புக்கூடுகளும், தான் அதிகம். அதோடு கிணறுகளிலும் தூர்வார்ந்தால் நிறைய மண்ணும் கல்லும் வரும் முந்தினகாலம். இப்ப கிணறை இறைத்தால் மண்டையோடும் எலும்புகளும் வரும். நீரும் கெட்டுப்போச்சு, ஊரும் கெட்டுப் போச்சு. என்னசெய்வது. தாயைப் பழித்தாலும் தண்ணிரை பழிக்ககூடாது எண்டு சொல்லுவினம்.

அம்மா எண்டதும் என் அம்மாவை மறக்கமுடியாது. அம்மா என் சிறிய வயதில் என்னை விட்டு மேலுலகு சென்றுவிட்டா. சிறு வயதிலேயே நிறையப்பேருக்கு அம்மா ஆக, பின் மருத்துவத்தாதியாக எனது  கடமைகளைச் செய்து கொண்டு இருந்திருக்கிறேன். எனது இருப்பிடம் ஓரிடமாக இல்லாவிட்டாலும், எனை அண்டி வந்த சொந்தங்களுக்கு என் கடமைகளைச் செய்திருக்கிறேன். இருந்தாலும் யுத்த வெள்ளத்தில் மூழ்கி எழும்பி சிதறி ஓடி அதில் இன்னும் மீள முடியாத சோகங்களிலும், வலிகளிலும் தாங்கொணாத்துயரிலும் மூழ்கிவிடுவேன். அப்ப எல்லாம் என்துணையாக என்கரம் பற்றிய  வாழ்க்கைத்துணையே கைகொடுத்து உதவுவார். வலியில்லா வாழ்வேது என்பார். ஆனால் சுதந்திரமான வாழ்வு நிம்மதியான வாழ்வு எல்லாருக்கும் எப்போதும் வேண்டும் என்கிறோம். அப்பதான்  உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.

இவ்வளவு நேரமும் எனக்காக இருந்ததோட இதையும் கொஞ்சம் கேளுங்கோ. உங்கட வீட்டு முற்றத்தில, அடுக்கு மாடிதொடர் வீடுகளில, மேல மொட்டைமாடி யன்னல் அருகே படிக்கட்டு இங்கெல்லாம் நல்ல துளசிச்செடி, கற்பூரவல்லிச்செடி, கறிவேப்பிலைகன்று, காய்கறிச்செடி இதுல் ஒன்றயாவது சாடிகளில் வைத்து நீருற்றி வளருங்க. காற்றும் தூய்மையாகும். உடலும் உள்ளமும் தூய்மையாகும். சூடும் தணியும். சுதந்திரமாக தூய்மையன காற்றையாவது சுவாசிக்கலாம். சரி அப்ப நான் போட்டு வரப்போறன்.

- அருந்தா

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.