முற்றம்
Typography

கூடங்குளம் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லை எனில்

அணுமின் திட்டத்தையே நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டி வரும். - உச்சநீதிமன்றம்

இவ்வாறான கருத்தினை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், வெளியிடப்பட்டிருக்கும் சில மக்கள் கருத்துக்கள் பின் வருமாறு உள்ளன.

"அணுமின் கொள்கையை கேள்வி கேட்குமளவிற்கு, மக்களின் நியாயத்திற்காக உச்ச நீதி மன்றம் நிற்குமா என்பது தான் அடிப்படை கேள்வி.அப்படி இல்லாவிட்டால் இந்த மாதிரி ’பன்ச் டயலாக்’ அடிப்பதில் சென்னை உயர் நீதி மன்றத்திற்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் போ ட்டி என வைத்துக் கொள்ளலாம்."

" மூவர் தமிழர் தூக்கில், சட்டவிரோதமாக ‘தடா’ கோர்ட்டில் வாங்கிய சாட்சியத்தினை வைத்து (இவர்களுக்கு தடா வழக்கு செல்லுபடியாகாது என உச்சநீதி மன்றமே சொன்னபிறகும்) தூக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதி மன்றம், இது நாள்வரை (மாநில) உயர் நீதி மன்ற விசாரனை என்கிற சனநாயக உரிமையை, வாய்ப்பினை நமது தோழர்களுக்கு தொடர்ந்து மறுத்து வந்திருப்பதன் (உச்ச நீதி மன்றத்தின்) அரசியலை புரிந்து கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு என வைத்துக் கொள்ளலாம்."

" சென்னையில இருக்கிற உயர்நீதிமன்றத்திலேயே தமிழனுக்கு நியாயம் கிடைக்கல. டெல்லியில இருக்கிற உச்சநீதிமன்றத்தில் எப்படி நியாயம் கிடைக்கும்? " ஆட்சியாளர்களால் மறைமுகமாக நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துதான் இந்த நீதிமன்றங்கள். "

அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு நாட்டின் அதி உயர் நியாயபீடங்களாக மக்களால் மதிக்கப்பட வேண்டிய நீதிமன்றுகளின் கூற்றுக்கு, மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறான அவநம்பிக்கைக்  கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது என்பது, அந்த அதியுயர் நீதிபீடங்கள் குறித்த நம்பிக்கை மக்கள் மத்தியில் இழக்கப்பட்டு வருவதைச் சுட்டுகிறது.

இவ்வாறான நிலையை ஒரு ஜனநாயக நாட்டின் ஆரோக்கிய நிலையெனக் கருத முடியாது எனக் கொள்ளலாமா?. அவ்வாறெனில் இந்தியா...?. இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணமா..?

- வேல்மாறன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்