தமிழ் நாட்டார் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவை மெல்ல மெல்ல அருகிவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சரசந்தாங்கல் என்ற கிராமத்தில் கூத்துக்கலை வடிவத்தில் ஒன்றான கட்டைக்கூத்து கலைக்கு உயிர்கொடுத்து காப்பாற்றி வருகிறார் ஒருவர்.

Read more: கட்டைக் கூத்தைக் காணக் கண் கோடி வேண்டும் !

அமெச்சூர் மேடை நாடகங்களுக்கு நடுவில் நவீன நாடகங்களுக்கு எப்போதுமே பார்வையாளர்கள் குறைவுதான். ஏனெனில், அவை அனைத்துமே சோதனை முயற்சிகள். ஆனால் நவீன நாடகங்களைக் காணக் காண அவற்றின் உட்புகுந்து நீங்களும் ஒரு நிகழ்த்துக் கலைஞராக உங்களை உணரவைத்துவிடும் வீர்யம் அவற்றுக்கு உண்டு.

Read more: மறக்கமுடியாத தென்னிந்திய நாடக விழா !

மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.

Read more: உயிர்ப்புடன் இத்தாலி பேர்கமோ Bergamo in vita

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

Read more: கொரோனாவால் வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? : உளவியல் மருத்துவர் ருத்ரன்

அறிவழகன் 65 வயது முதியவர். 60 வயது நிறைந்த தனது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இந்த ஏழைத் தம்பதியைப் பற்றித்தான் கோரோனாவை மறந்து தற்போது தமிழகமே பேசிக்கொண்டிருக்கிறது.

Read more: புற்றுநோய் வலியால் துடித்த மனைவி; 140 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த 65 வயது அறிவழகன் !

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

Read more: " நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் !

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

Read more: "மரணத்தை வென்ற மார்கரித்தா - விழிப்பின் மகிழ்ச்சி" : ஒரு இத்தாலிய அனுபவம்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.