மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள் பால் ஈர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பரமாகவும், மிடுக்காகவும் உடையணிவீர்கள். கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கடினம்தான். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருப்பது அவசியம். பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதன் மூலம் உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மீனம்

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

பூர்வீகச் சொத்து என்று பிறர் பலத்தை நம்பாமல் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளர் என்ற பெயரைப் பெறக்கூடிய செயலாற்றல் படைத்தவர் நீங்கள். உங்கள் இரக்க சுபாவத்தின் காரணமாக சிலர் பயன்பெரக்கூடுமாயின் சிலர் அதையே உங்கள் பலவீனமாகக் கருதி உங்களை ஏமாற்றவும் முற்படுவார்கள். அதன் காரணமாக நீங்கள் மனவருத்தமடைவீர்கள். சரியானபடி ஆட்களைப் புரிந்து கொள்வதன் மூலம் இக்குறையைப் போக்கிக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. சின்னஞ்சிறு வேலையையும் மிகுந்த கற்பனைத் திறத்துடனும் கலை நுணுக்கத்துடனும் செய்வீர்கள். அதனால் பாராட்டுகளைப் பெறக்கூடிய உங்களுக்குக் கெடுதல் செய்ய யாராலும் முடியாது என்னும் அளவுக்கு தெய்வபலம் உங்களுக்கு உள்ளது. எத்தகைய இன்னல்களையும் எதிர்கொண்டு முன்னேற்றப்பாதையில் நடை பயில்வீர்கள்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : கும்பம்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் பிறரிடம் கை கட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். மனதிற்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக பீடு நடை போடுவீர்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் நன்மையே செய்வீர்கள். அவசரத்தில் உணர்ச்சிகளை மட்டும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். செய்யும் காரியங்களில் சிறிது அக்கறை மட்டும் எடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : தனுசு

துலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்திருக்கும். இதன் மூலம் எல்லாவித பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : துலாம்

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

கல்விமான் என்று பலராலும் பாரட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும். இளம் வயதில் எப்படியிருப்பினும் உங்கள் அயராத உழைப்பால் நாளும் படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை எட்டிப்பிடித்துச் சாதனையாளராகத் திகழ்வீர்கள். மலை குலைந்தாலும் நிலை குலையாத மன உறுதி கொண்டவர்களாக இருந்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள். ஓரளவு பிடிவாதகுணம் என்ற உங்கள் பலவீனத்தைக் கைவிட்டீர்களானால், உங்களுக்கு எதிரிகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லோரையும் உங்கள் வசம் ஈர்த்துக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் நீங்கள். எதிரிகளைச் சமயம் பார்த்திருந்து கவிழ்த்து விடுவதிலும் தயங்க மாட்டீர்கள். ஜோதிடம், வாஸ்து போன்றவற்றிலும் எழுத்துத் துறையிலும் சிறந்த ஞானஸ்தர்களாக விளங்குவீர்கள்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மகரம்

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன் நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும். கவனம் தேவை. எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : விருச்சிகம்

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், கன்னிராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

Read more: குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : கன்னி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்