ஜோதிடம்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலா நக்ஷத்ரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்
செவ்வாய் - திருவோணம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
புதன் - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம்
குரு - உத்திராடம் 2ம் பாதம் - சூரியன் சாரம் - அதிசாரம்
சுக்ரன் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சனி - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் சாரம்
ராஹு - திருவாதிரை 1ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 3ம் பாதம் - கேது சாரம்

கேது தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

சார்வரி வருஷத்தின் நவநாயகர்கள்:

ராஜா - புதன்
மந்திரி - சந்திரன்
அர்க்காதிபதி - சந்திரன்
மேகாதிபதி - சந்திரன்
ஸஸ்யாதிபதி - குரு
சேனாதிபதி - சந்திரன்
இரஸாதிபதி - சனி
தான்யாதிபதி - புதன்
நீரஸாதிபதி - குரு
பசுநாயகர் - கோபாலன்

சார்வரி வருஷ வெண்பா:

சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு.
- இடைக்காடர் வாக்கு

பொது பலன்கள்:

இந்த சார்வரி ஆண்டை பொருத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும்.

இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும்.

ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா ரஷ்யா வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம்.

இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். ராஜாவாக புதன் இருப்பதால் அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும்.

ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார் லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.

மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

இந்த ஆண்டு ஈரான் ஈராக் அமெரிக்கா கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஈரான் ஈராக் இந்தோனேசியா ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும். அமாவாசை பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்கள், தொடர்ச்சியாக அடுத்து வரும் நாட்களில் பிரசுரமாகும். உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து