ஜோதிடம்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2020, புதன்கிழமையும் சுக்ல சஷ்டியும் சதய நக்ஷத்ரமும் வ்யதீபாத நாமயோகமும் கௌலவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:
லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்
சந்திரன் - சதயம் 3ம் பாதம் - ராகு சாரம்
செவ்வாய் - விசாகம் 4ம் பாதம் - குரு சாரம்
புதன் - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
குரு - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்
சுக்கிரன் - திருவோணம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்
சனி - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்
ராகு - திருவாதிரை 2ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்

ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண்: 2020:

இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 0 = 4. நான்கு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்க்கைக்கும் வாராகி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும்.

பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயணம் - ஆண்மீகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும்.

உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும்.

நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது.

யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்கள், தொடர்ச்சியாக அடுத்து வரும் நாட்களில் பிரசுரமாகும். உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.