ஜோதிடம்
Typography

மேஷம் : (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எதையும் சாதிக்கும் திறமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!  இந்த ஆண்டு அனைத்து கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதாலும் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். புதன் சஞ்சாரம் ராசிக்கு 3ல் நாடிப்படி சம்பந்தம் பெறுவதால் தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.  கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அஸ்வினி:
இந்த ஆண்டு குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.

பரணி:
இந்த ஆண்டு கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புகரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த ஆண்டு தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்