ஜோதிடம்
Typography

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எல்லோரிடமும் இதமான அணுகுமுறையும், மனஉறுதியும் மிக்க மகர ராசியினரே இந்த ஆண்டு பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும்.

உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிக ரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த ஆண்டு நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவீர்கள்.

திருவோணம்:

இந்த ஆண்டு கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது.

அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த ஆண்டு உற்றார், உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும்.


பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS