ஜோதிடம்

மிதுனம்: மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்: நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், மிதுன ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான நீங்கள் பார்வைக்குத் தான் அப்படியே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான். தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதைத் தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள். சுயமாகத் தொழிலோ, வியாபாரமோ செய்வதிலும், மற்றவர்கள் பலரையும் அனுசரித்துப் போவதிலும், விருப்பம் மிகக்கொண்ட உங்களுக்கு, இந்த குருப் பெயர்ச்சி பலனைப் பார்ப்போம்.

கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது அஷ்டம ஆயுள் ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய விரைய ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய தன வாக்கு குடும்ப ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் சப்தம களத்திர ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும், அவருடைய பார்வை மூலமாக நல்ல பலன்கள் உங்களுக்கு ஏற்படும். இதே வேளையில் சனி பகவானும் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாற்றம் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொல்வாக்கு செல்வாக்கு இரண்டுமே உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வாக்கு சாதுர்யத்தால் நன்மைகள் ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சி பெறும். பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வந்து சேரும். உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். சில வேளைகளில் நிதானத்தை இழக்க நேரிடலாம். அந்த நேரங்களில் பொறுமையை நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். நான்காம் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். ஆறாம் இடத்தில் கேது பகவானுடைய சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் அவசியம். சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். வண்டி வாகனம் பயன்படுத்தும்போது மிகவும் கவனம் அவசியம். ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். முடிவெடுப்பதில் குழப்பங்கள் ஏற்படலாம்.

முடிந்தவரை நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு ஏற்படும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சொந்தங்களுடன் தேவையில்லாத கருத்து மோதல்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் கவனம் அவசியம். ஜாமீன் கையெழுத்து இடும் போது மிகவும் கவனம் தேவை. தொழில் உத்தியோகத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் வெளிநாடு பயணங்கள் ஏற்படலாம். எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆக அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் தெளிவு பெற ஆலோசனைகள் அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு
உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

வியாபாரிகளுக்கு
உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம். வேலையாள்களின் நடாவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

கலைத்துறையினருக்கு
புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.

மாணவர்களுக்கு
விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள். வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் அவசியம்.

அரசியல்வாதிகள்:
எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பெயர்ச்சியாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள். மேல்மட்டத்தில் இருப்பவர்களுடன் சிறிது நல்லிணக்கம் அவசியம்.

பெண்களுக்கு :
எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

15.11.2020 - 04.01.2021 வரை:
குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இந்த காலகட்டத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த நேரத்தில் கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கலில் சங்கடங்கள் உண்டாகலாம். வாங்கிய கடனுக்காக நிர்ப்பந்த கெடுபிடிகள் வரலாம். குழந்தைகள் சார்ந்த செலவினங்கள் - சிரமங்கள் - வங்கிகளால் சில தொந்தரவுகள் - உடல்நலத்தில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். முடிந்தவரை அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது நன்மையை கொடுக்கும்.
05.01.2021 - 01.03.2021 வரை:
உங்களுடைய மிதுன ராசிக்கு தன வாக்கு குடும்ப அதிபதியான சந்திரனுக்கு சொந்தமான திருவோண நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். நிதி சம்பந்தமான சீர்த்திருத்தங்களை செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையால் அனுகூலத்தைப் பெறுவீர்கள். பெண்களால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்.
02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய ரண ருண ரோக அதிபதி லாபாதிபதி செவ்வாய் சாரம் பெற்று நேர்கதியில் சஞ்சாரம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக ரத்த சம்பந்தமான பிரச்சனைகள் - வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். நட்பு சம்பந்தமான ரீதியில் நல்லுறவு ஏற்படும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்து சேரும். வருமான வசதிகள் அபிவிருத்தி அடையும்.
16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் வக்ர கதியில் இயங்குகிறார். சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். சுக சௌகரியங்கள் - சந்தோஷங்கள் கைகூடும். ஆரோக்கியத்திற்கு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவு குறையும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கடன்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கும்.

நட்சத்திரப் பலன்கள்:

மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

திருவாதிரை:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:
குருப் பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும். 2, 5, 6 ஆகிய எண்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய ஹோரைகள் நன்மையைக் கொடுக்கும். மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

+ குடும்பத்தில் சந்தோஷம் : - தொழிலில் சுணக்கம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.