ஜோதிடம்

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், சிம்ம ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

சிம்ம ராசி அனபர்களே! ராசியின் பெயருக்கேற்ப சிங்கதிற்கே உரிதான கம்பீரமான் தோற்றம் உங்களுக்கு அமைந்திருக்கும் என்பதுடன் எதிர்ப்புகள், இன்னல்கள் எதுவாயினும் தாங்கிக் கொண்டு செயல்படக்கூடிய மன உறுதியும் உங்களிடம் அமைந்திருக்கும் அதே வேளையில் அண்டியவர்களை ஆதரித்து அன்பு காட்டும் இரக்ககுணத்திலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பதும் உண்மை. அதாவது வம்புச்சண்டைக்கு போகமாட்டீர்கள். ஆனால் வந்த சண்டையை எளிதில் விட மாட்டீர்கள். எதிரிகளை ஊடுருவி கண்டரிந்து தக்கபடி நடந்துக்கொள்ளும் பண்பும் அறிவாற்றலும் , செயலாற்றலும் மிக்கவர்களான நீங்கள் உங்களிடம் இயல்பாக உள்ள பிடிவாத குணத்தை மட்டும் ஓரளவு மாற்றிக் கொண்டால் உங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வுக்கும் சரி உடல் நலத்திற்க்கும் சரி மிகப்பெரும் பாதுகாப்புக் கவசமாக இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு நடைபெற இருக்கும் பலன்களை இனி பார்ப்போம்.

கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய தொழில் ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய விரைய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானத்திலும் - கேது பகவான் சுக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

ஆறாம் இடமான ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறி இருக்கக்கூடிய குரு பகவான் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனாலும் அவருடைய பார்வையின் மூலமாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாக்கு வன்மை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்து சேரும். குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நல்லபடியாக நடக்கும். மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வீடு மனை சார்ந்த விஷயங்களில் சிறிய சுணக்க நிலை ஏற்படலாம். முடிந்தவரை எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். தாயார் தாய்வழி உறவினருடன் பேசும்போதும் கருத்துக்களை தெரிவிக்கும் போதும் கவனம் அவசியம். குழந்தைகளுடைய காரியங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம். முக்கியமாக வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உங்கள் உடம்பிற்கு செரிமானமாகாத உணவுகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்க பெறுவீர்கள். வண்டி வாகனம் பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய உத்தியோகத்தினை விட்டுவிட்டு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சியும் வெற்றி பெறும். சுப விரயச் செலவுகள் இந்த குரு பெயர்ச்சியினால் உங்களுக்கு ஏற்படும். புண்ணிய யாத்திரைகள் புண்ணிய நதிகளில் நீராடுதல் கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் கலந்து கொள்ளுதல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள்.

புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்துவிலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவிவரும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயர்வுகள் போன்ற சலுகைகள் பெற்று மகிழ்ச்சியடைக்கூடும். சிலர் வேலையில் இருந்து கொண்டே தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.

வியாபாரிகளுக்கு:
உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது கணிசமான லாபமும் அதிக் கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.

கலைத்துறையினருக்கு:
வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவாரியாகப் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும்.உங்கள் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. இதுவரை பகைமை காட்டி வந்த சில கலைஞர்களும் கூட உங்களைத்தேடி வருவார்கள். நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.

மாணவர்களுக்கு:
கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று , ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு முன்னரே சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு:
உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத்தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில உங்கத்தேடிவரும் உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக் குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள்.

பெண்களுக்கு:
வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை,ஆபரணச் சேர்க்கை,உறவினர் வருகை எல்லமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம் அமையப் பெருவீர்கள். உங்கள் பிறந்தவீட்டு வகையிலான உங்கள் கனவருக்குப் பெரிதும் துனையாயிருக்கும்

15.11.2020 - 04.01.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் உங்களுடைய ராசிநாதனான சூரியனுடைய சாரத்தில் பயணம் செய்கிறார். பணவரவுகளில் இருந்த முடக்கம் நீக்கும். வீண் செலவுகள் குறையும். பற்றாக்குறை பிரச்சனைகள் தீரும். கடன் விவகாரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சுபகாரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறி வேகம் பிடிக்கும். குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் தீரும். குழந்தைகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கவலைகள் நீங்கி இன்பம் அதிகரிக்கும்.
05.01.2021 - 01.03.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய அயன சயன போக ஸ்தானாதிபதியான சந்திரனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். சுபச்செலவுகள் ஏற்படும். வீடு வாகன வசதிகள் பெருகும். கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சனைகள் அகலும். எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரிடமும் முறையான ஆவணங்கள் இன்றி கடன்கள் வாங்க வேண்டாம். ஆடை ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய காலகட்டம்.
02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் உங்களுடைய சுகாதிபதி பாக்கியாதிபதி செவ்வாயினுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். எந்த ஒரு நேரத்திலும் பிடிவாத குணம் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். எந்த ஒரு விஷயத்திலும் சுணக்க நிலை மாறி வேகம் என்பது பிடிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். வீடு வாகன வசதிகள் ஏற்படும். உங்களுடைய தகுதியை நீங்கள் உயர்த்திக் கொள்வீர்கள். மதிப்பு மரியாதை ஏற்படும்.
16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். நல்ல பலன்கள் அசுப பலன்கள் இணைந்து இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். அலுவலகம் சம்பந்தமான விஷயங்களில் சில சிரமங்கள் ஏற்படலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் உண்டாகலாம். வீடு மனை சம்பந்தமான விஷயங்களில் சில நேரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகலாம்.

நட்சதிரப்பலன்கள்
மகம்:
உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு வந்தவை யாவும் இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு. உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும்,வெற்றி பெரும்வரை சளைக்காமல் அதற்கெனப்போராடி இறுதியில் வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள். உடல்நிலை சீராக இருந்துவரும். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பேசி நிறுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளின் பெருமை பன் மடங்காக பெருகும்.
பூரம்:
குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.
உத்திரம் 1 ம் பாதம்:
குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். “ஓம் நமசிவய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். வீட்டில் தினமும் ஐந்து ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றவும். 1, 3, 5, 9 ஆகிய எண்கள் நன்மைகளைத் தரும். சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகிய ஹோரைகள் அதிர்ஷ்டங்களைக் கொடுக்கும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

+ பணவரவு : - சொத்துகளில் பிரச்சனை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.