ஜோதிடம்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், கன்னி ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவிலெல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் பெருந்தன்மைக்கும் கௌரவத்திற்கும் குறை ஏற்படாமல் கவனித்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் நாணயமாக நடந்து கொள்வீர்கள். தெய்வ பக்தியிலும், தெய்வ பலத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.

கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய ராசியையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் சுக ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வசந்தம் - மிகப்பெரிய நல்ல மாற்றம் ஒன்று வந்திருக்கிறது. குரு பகவான் அவருடைய பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. சுப நிகழ்வுகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். மங்கள காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல் நல்லபடியாக நடைபெறும். எந்த விஷயத்திலும் இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும். இவ்வளவு நாட்களாக இருந்துவந்த தேவையில்லாத வீண் பயம் - கவலை - சஞ்சலம் அனைத்தும் நீங்கும்.

வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழும். குடும்பத்தில் இளைய சகோதர சகோதரிகளிடம் தேவையில்லாத சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். முடிந்தவரை விட்டுக்கொடுத்துச் செல்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வீடு மனையில் இருந்து வந்த சுணக்க நிலை அனைத்தும் மாறும். இதுவரை வாழ்க்கையில் ஒரு அடி நிலம் கூட இல்லாதவர்கள் இந்த குருபெயர்ச்சியில் கண்டிப்பாக இடம் வாங்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு சந்தான அபிவிருத்தி ஏற்படும். மங்கள காரியங்களில் இருந்து வந்த சுணக்க சூழ்நிலை அனைத்தும் மாறும். வாழ்க்கை துணையிடம் இருந்து வந்த மனக் கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தினரின் நல் ஆதரவால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். ஒன்பதாம் இடத்தில் ராகு பகவானுடைய சஞ்சாரம் இருப்பதால் தந்தையின் உடல்நிலையில் சிறிது கவனம் அவசியம். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் தர்க்க ஞானமும் வெளிப்படும்.

உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள். அதே நேரம், கவனம் சிதறாமல் உழைக்காவிட்டால் சரியான இலக்கைக் குறித்த நேரத்தில் அடைய முடியாமல் போகலாம். தொழில் உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். குருபகவான் பார்ப்பதால் வர வேண்டிய பண பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்க பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பது - புதிய உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் சேரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் தேவைகளையும் சரியாக பூர்த்திச் செய்யுங்கள். அதோடு எவருக்கும் வாக்குக் கொடுக்காமலும், முன்ஜாமீன் போடாமலும், உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் சுமூகமாக பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் மேல் எவ்வித புகாரும் எழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.

கலைத்துறையினருக்கு:
பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்கள் முயற்சியால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். கவலை வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு:
படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் ஞாபகத் திறனை பெருக்கிக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு:
இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் கிட்டும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.

பெண்களுக்கு:
அவ்வப்பொது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிக செலவு செய்ய நேரலாம். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதியதாக வாகன சேர்க்கை இருக்கும். சொந்த மனையில் குடியேறும் நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும்.

15.11.2020 - 04.01.2021 வரை:
குரு பகவான் இந்த காலகட்டத்தில் உங்களுடைய விரையாதிபதி சூரியனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். சுப விரயச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு மனை வாங்குவது - வாகனங்களை புதுப்பிப்பது - நின்று போயிருந்த பணிகளைத் தொடர்வது போன்றவை நடக்கலாம். உடல்நலம் சிறக்கும். அறிவாற்றல் பெருகும். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்வீர்கள். வருமானம் உயரும். உங்களுடைய தகுதி நேர்மை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் கூடும்.

05.01.2021 - 01.03.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய லாபாதிபதியான சந்திரனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் பெருகும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். உத்தியோகம் - தொழில் வியாபாரத்தில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். ஆதாயம் ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு பாராட்டுகள் வந்து குவியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் உங்களுடைய தைரியாதிபதி அஷ்டமாதிபதி செவ்வாயின் சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் அரசாங்க அனுகூலங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மங்கள காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல் சம்பந்தமான விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். ஆனாலும் சில நேரங்களில் பிடிவாத குணம் உண்டாகலாம். அந்த வேளைகளில் பொறுத்துப்போவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். ரத்தம் சம்பந்தமான உறவுகளிடம் தேவையில்லாத சில கருத்து மோதல்கள் உண்டாகலாம். முடிந்தவரை நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும்.

16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். எந்த விஷயத்திலும் திட்டமிடல் மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வீண் பயம் கவலை ஆகியவை ஏற்படலாம். அனைத்து விஷயங்களிலும் யோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வாழ்க்கைத்துணையுடன் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் உண்டாகலாம்.

நட்சதிரப்பலன்கள்

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

ஹஸ்தம்:
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்காத பணி இட மாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சித்திரை 1, 2ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ள்ப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.

பரிகாரம்: வாராகி தேவியை சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். “ஓம் ஸ்ரீவாராகி தேவ்யை நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும். வீட்டில் பித்தளை ஐந்து முக விளக்கு நல்லெண்ணை மற்றூம் நெய் கலந்து ஏற்றவும். 2, 5, 6, 9 ஆகிய எண்கள் நன்மை கொடுக்கும். சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் சிறப்பாக இருக்கும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;

+ பதவி உயர்வு : - வீண் விரையம்

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.