ஜோதிடம்

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், மிதுன ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன் நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும். கவனம் தேவை. எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும்.

கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திலும் - கேது பகவான் ராசியிலும் இருக்கிறார்கள்.

இந்த குருபெயர்ச்சியை பொருத்தவரை உங்களுடைய மூன்றாம் இடத்திற்கு குரு பகவானுடைய மாற்றமானது அமைந்திருக்கிறது. ஏற்கனவே ராசியில் கேதுவினுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது. குழப்பமான நேரங்களில் கூட தெளிவான முடிவினை உங்களால் எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் அவசியம். உங்களுடைய உடம்பிற்கு எது ஒவ்வாதோ அதை தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனம் அவசியம். பொருளாதாரம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும். சகோதர சகோதரிகளிடம் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில் இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும் பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும். புதுப்புதுப் பிரச்னைகளுக்கு நூதனமாகக் சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்படலாம். மேலும் தீயோரின் சகவாசத்தை அடியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதோடு பாகப்பிரிவினைகளை துரிதப்படுத்தாமல் தாமதப்படுத்துங்கள்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வீடு மனை சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். எதிர்பார்த்த பதவி உயர்வு பணியிட மாற்றம் உறுதிப்படுத்தப்படுகிறது. உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் சார்ந்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வரவேண்டிய பண பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு:
உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம். படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு:
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமூகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவர்களுக்கு:
உங்கள் படிப்பாரவம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாரட்டுகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:
உங்கள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப் படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு.

பெண்களுக்கு:
குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

15.11.2020 - 04.01.2021 வரை:
குருபகவான் இந்த கால கட்டத்தில் உங்களுடைய லாபாதிபதி சூரியனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். கல்வி மற்றும் அது சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கப் பெறுவீர்கள். பெற்றோரினுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். ரத்தம் சம்பந்தமான உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்படும்.

05.01.2021 - 01.03.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். அலுவலகம் சம்பந்தமான சிரமங்கள் நீங்கும். மேலிடத்திலிருந்து வந்த அதிருப்தி அகலும். புதிய வேலைவாய்ப்பு சம்பந்தமான முயற்சிகள் வெற்றி கொடுக்கும். உபரி வருமானம் சம்பந்தமான முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். ஆடை அணிகலன்கள் சேரும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய தகுதி உயரும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய உழைப்பினை அங்கீகரிப்பார்கள்.

02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய தனவாக்கு குடும்ப அதிபதி சப்தமாதிபதி செவ்வாயினுடைய சாரம் பெற்று நேர்கதியில் சஞ்சாரம் செய்கிறார். வாக்குவன்மை ஏற்படும். கொடுத்த வாக்கினை காப்பாற்றமுடியும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுய கட்டுப்பாடு அதிகரிக்கும். அதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் புதிய சீர்திருத்தங்களை நீங்கள் செய்வீர்கள்.

16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சில விஷயங்களில் அதிருப்தி ஏற்படலாம். எந்த நேரத்திலும் தெளிவாக பேசுவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுணங்கிக் கடந்த காரியங்கள் அனைத்தும் மீண்டும் வேகம் பெறும்.

நட்சதிரப்பலன்கள்:
விசாகம் 4ம் பாதம்:
இந்த குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.
அனுஷம்:
இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.
கேட்டை:
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும். “ஓம் தும் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். வீட்டில் தினமும் நெய் விட்டு ஒரே ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும். 1, 3, 7, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. ஞாயிறு, செவ்வாய், குரு ஆகிய ஹோரைகளில் நன்மைகள் ஏற்படும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகளினால் அனுகூலங்களைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்;

+ உண்மையை உணர்தல் : - எடுத்த காரியங்களில் சுணக்கம்

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.