ஜோதிடம்
Typography

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுர்முகி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி, 01 ஜனவரி 2017,  ஞாயிற்றுக்கிழமையும் சுக்ல திரிதியையும் திருவோண நக்ஷத்ரமும் ஹர்ஷண நாமயோகமும் கரஜி கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

சூரியனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2017:

இந்த வருடத்தின் கூட்டு எண்: 10 - 1 + 0 = 1. ஒன்று என்பது சூரியனின் ஆதிக்கம் பெற்ற எண். சிவனுக்கும் சாஸ்தாவிற்கும் அய்யனாருக்கும் உகந்த எண் ஒன்றாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னத்தில் குரு இருக்கிறார். லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் சுக சப்தமாதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் ரண ருண ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி தைரிய ஸ்தானத்தில் லக்னாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். தொழில் வளர்ச்சி அடையும். பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும். இந்த ஆண்டு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாகும். அதிகமான  கோவில்களுக்கு புணரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும்.  அரசாங்கம் ரீதியாக பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்சனைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி:

ராகு கேது பெயர்ச்சி:
மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீஹேவிளம்பி வருஷம் ஆடி மாதம் 11ம் நாள் (27.07.2017) வியாழக்கிழமை அன்று ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் - கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

குருப் பெயர்ச்சி:
மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம் நாள் (02.09.2017) சனிக்கிழமை அன்று குரு பகவான் கன்னியா ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.

சனிப் பெயர்ச்சி:
மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீஹேவிளம்பி வருஷம் மார்கழி  மாதம் 4ம் நாள் (19.12.2017) செவ்வாய்கிழமை அன்று சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசிக்கு மாறும் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - பத்தாம் பார்வையால் கன்னியா ராசியையும் பார்க்கிறார்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்களை  உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS