ஜோதிடம்
Typography

மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

கிரகமாற்றங்கள்: விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: ராசி - லாப ஸ்தானம் - தைரிய வீரிய ஸ்தானம்.

பலன்கள்:
இந்த புத்தாண்டில் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகள் மறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

உடல் ஆரோக்கியம்:
இந்த புத்தாண்டில் இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். முக்கியமாக அறுவை சிகிச்சை போன்றவற்றில் இருந்து தப்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சோம்பல்தனம் அகலும். ஆனாலும் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது நன்மை தரும். முக்கியமாக பித்தம் சம்பந்தமான உணவுகளை சரிவிகிதத்தில் சாப்பிடுவது நல்லது.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் இருந்த தடை நீங்கும். நீண்ட நாட்களாக திருமணத்தை எதிர்நோக்கியிருந்த நங்கைகளுக்கு திருமண வாழ்க்கை உண்டாகும். சந்தாணகாரகன் குரு ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கும்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்
குழந்தைகளின் கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அவர்களுக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். குழந்தைகளை மேற்படிப்பிற்காக பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு:
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.

சேமிப்பு/முதலீடு/பொருளாதாரம்/புதுவீடு
வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். இருப்பினும் புரட்டாசி மாதத்திற்குப் பிறகு தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் அதன் பிறகு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு - மனை - வாகனம் வாங்க முடியும்.

வம்பு / வழக்குகள்:
உங்களுடைய பேச்சிற்கு மரியாதை இருக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சரத்தின் மூலம் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்:
புரட்டாசி மாதம் வரை உங்களுக்கு நன்மை அளிக்கும் காலகட்டம். அதன் பின் பங்குனி வரை எடுக்கும் காரியங்களில் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும்.

அஸ்வினி:
இந்த ஆண்டு நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பரணி:
இந்த ஆண்டு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த ஆண்டு பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்