ஜோதிடம்
Typography

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)
பாரதி சொன்ன புதுமைப் பெண் போன்று நடையில் மிடுக்கும் தோரணையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: பாக்கிய ஸ்தானம் - களத்திர ஸ்தானம் - லாப ஸ்தானம்.

பலன்கள்:
இந்த ஆண்டு தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேதுவினுடைய் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த நேரத்தில் வயிறு சம்பந்தமான உபாதைகள் குறிப்பாக செரிமானம் சம்பந்தமானப் பிரச்சனைகள், பெண்களுக்கான மாத பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். அதிகமாக ரத்தம் சம்பந்தமான காய்கறிகள், பழங்களை உட்கொள்வது நன்மை தரும்.

குடும்பம்/உறவுகள் :
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். துக்கமும், துன்பமும் நீங்கும். சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. கவுரவம் அந்தஸ்து உயரும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து முடியும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். உங்களுடைய களத்திர ஸ்தானத்தை குரு தன் ஏழாம் பார்வையால் பார்த்து அருள் செய்வதால் திருமணம் சார்ந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கட்டாயம் உண்டு.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்:
குழந்தைகளின் கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். அவர்கள் மூலம் உங்களுக்கு நற்பெயர் ஏற்படும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு:
தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

சேமிப்பு/முதலீடு/பொருளாதாரம்/புதுவீடு:
வரும் புரட்டாசி மாதத்திற்குப் பிறகான காலகட்டத்தில் சேமிப்புகள் அதிரடியாக உயரும். சுகஸ்தானத்திற்கு மாறும் குருவால் புதிய வீடு மனை பாக்கியம் ஏற்படும். ஏற்கனவே இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

வம்பு / வழக்குகள்:
ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த வருட முற்பாதியில் சின்ன சின்ன வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் வருடத்தின் பிற்பாதியில் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். மன திடம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை அடியோடு மாறும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்:
புரட்டாசி மாதம் வரை சுபச்செலவுகள் இருக்கும். இருப்பினும் அதன்பிறகான காலகட்டத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். வருடத்தின் பிற்பாதி மிகச் சிறப்பாக இருக்கும்.

மகம்:
இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பூரம்:
இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமசிவய என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS