ஜோதிடம்
Typography

துலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே நீங்கள் களத்திர காரகன் அழைக்கப்படும் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: களத்திர ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம்.

பலன்கள்:
இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும்.

உடல் ஆரோக்கியம்:
ராசியிலேயே குருவின் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உடலில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். குழந்தை பாக்கியம் நிச்சயமாக உண்டு.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்:
குழந்தைகளின் நலன் மேம்படும். குழந்தைகளின் அறிவு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். அவர்களின் உடல்நிலை மேம்படும். சுபநிகழ்ச்சிகள் மிக அதிகமாக நடைபெறும்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு :
தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சேமிப்பு/முதலீடு/பொருளாதாரம்/புதுவீடு:
ராசியில் குரு இருப்பதால் அதிகமான சேமிப்புகளை நீங்கள் செய்ய முடியும். நான்காம் இடத்தில் இருக்கக்கூடிய கேதுவால் புதிய வீடு மனை வாங்கும் போது பத்திரங்களை கவனமாக படிப்பது நல்லது. எந்த விஷயங்களிலும் கவனச்சிதறல்கள் கூடாது.

வம்பு / வழக்குகள்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உங்கள் பக்கமுள்ள நியாயம் தீர்ப்பாகும். உங்கள் பேச்சிற்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்:
புரட்டாசி மாதம் வரை சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். அதன் பிறகு எடுக்கக்கூடிய முயற்சிகளில் வேகம் பிறக்கும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த ஆண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

சுவாதி:
இந்த ஆண்டு எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த ஆண்டு சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ எனற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS