ஜோதிடம்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பொது வாழ்வில் நாட்டம் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் தனகாரகன் என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: தன வாக்கு குடும்ப ஸ்தானம் - அயன சயன போக ஸ்தானம் - சுக ஸ்தானம்.

பலன்கள்:
இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:
ரண ருண ரோக ஸ்தானதிபதி சுக்ரன் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார். எனவே உடல் உபாதைகளைப் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு பொதுவாகவே மறைவிட பிரச்சனை இருக்கும். அது பெரிதாகமல் பார்த்துக் கொள்ளுங்கள். சூர்யன் பார்வை இருப்பதால் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவு ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு அலங்கரிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைபதில் சிறிது சுணக்க நிலை ஏற்படலாம்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்
குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் அவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மேற்படிப்பிற்காக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு:
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

சேமிப்பு, முதலீடு, பொருளாதாரம்:
தனஸ்தானாதிபதி செவ்வாய், சனிபகவானுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் உங்கள் பொருளாதார வளர்ச்சி நிதானமாக இருக்கும். எனினும் கவலை வேண்டாம். சுகஸ்தானத்தை தனஸ்தானாதிபதி பார்ப்பதால் புதிய முதலீடுகள் செய்யலாம். புது சேமிப்புகளும் தொடங்கலாம். உங்கள் பெயரில் செய்வதை விட உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் செய்வது லாபம் தரும்.

வம்பு / வழக்குகள்:
அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். அதே வேளையில் தேவையில்லாத இடங்களில் உங்கள் கருத்துக்களை இட வேண்டாம். வழக்குகள் ஆனி மாதத்திற்கு பிறகு வேகம் பிடிக்கும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்:
புரட்டாசி மாதம் வரையிலான காலகட்டத்தில் மிக எச்சரிகையாக இருப்பது நல்லது. அதன் பின்னான காலகட்டம் உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த ஆண்டு எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள்.

உத்திரட்டாதி:
இந்த ஆண்டு பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ரேவதி:
இந்த ஆண்டு சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நவக்ரஹ தேவதாப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

சிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சென்னை அசோக்நகரில் கணவர் தேவகுமாரன், இரு மகள்களுடன் வாழ்த்து வந்த தேவயானி தற்போது தனது கணவரின் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான் தலைமை தாங்கிய பாஸ்டனில் உள்ள சிம்பொனி அரங்கில் பெர்க்லீ இசைக் கல்லூரியால் இந்த மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.