மனமே வசப்படு
Typography

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு பகுதியினை நீங்கள் தொடர்ந்து கடந்த இரு வருடங்களுக்கு மேலாக படித்து வந்திருக்க முடியும். அல்லது இன்னமும் இப்பகுதிக்கு புதியவராக இருக்கலாம்.

எனினும் ஒரு முறை இப்பகுதியில் உங்களது மனதை பதித்துவிட்டீர்கள் எனில் இலகுவில் விட்டுச்செல்ல மாட்டீர்கள் என்பதை கடந்த இரு வருடங்களாக ஒவ்வொரு பதிவுக்கும் கிடைத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை வைத்து எம்மால் கணிக்க முடிந்தது.  560 பதிவுகளை கடந்து இன்னமும் தொடர்ந்து பயணிக்கிறது மனமே வசப்படு பதிவுகள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் பேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நீங்கள் இப்பக்கத்தை லைக் செய்தீர்கள் எனில் உங்களது பேஸ்புக் ஹோம்பேஜ் பக்கத்திலும் இப்பதிவுகள் தினம் தோறும் தோன்றும்.

நீங்கள் துயரமாக இருந்த ஒரு தருணம், சந்தோஷமாக இருந்த ஒரு தருணம். தோல்வியில் துவண்டுபோன ஒரு தருணம், தன்னம்பிக்கையை இழக்ககூடாத ஒரு தருணம் என ஏதாவது ஒரு தருணத்தில் இந்த மனவே வசப்படு பதிவு தற்செயலாக உங்கள் கண்ணில் பட்டிருந்தால், அது நிச்சயம் மனதை வசப்படுத்தியிருக்கும். உங்களை அறியாமலே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். அப்படி நீங்கள் உணர்ந்திருந்தால் அது தான் இப்பதிவுகளுக்கு கிடைத்த உண்மையான வெற்றி.

4தமிழ்மீடியா தளத்தில் பதிவிடப்பட்ட அனைத்து மனமே வசப்படு தொகுப்புக்களையும், 2 நிமிடங்களில் ஒரு சிறு தொகுப்பாக நீங்கள் இவ்வீடியோவில் காணலாம். மேலும் இவ்வீடியோவில் நீங்கள் எந்த ஒரு செக்கனில் நிறுத்தினாலும், ஏதோ ஒரு மனமே வசப்படு பதிவை வாசிக்க முடியும். இவ்வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், உங்கள் கருத்துக்களை பதியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்.

மனமே வசப்படு பேஸ்புக் பக்கம் உங்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்தால் அதையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வெறுமனே விளம்பரத்திற்காக அல்ல. உங்கள் நண்பர்கள் மனமுடைந்து போயிருக்கும்  நேரத்தில் நிச்சயம் இப்பதிவுகள் அவர்களை உற்சாகப்படுத்தக்கூடியன.

உங்களைப் போன்று மேலும் பல்லாயிரக் கணக்கானவர்களின் மனங்களின் தன்னம்பிக்கையை விதிக்கட்டும் இம் மனமே வசப்படு பதிவுகள்.

மனமே வசப்படு கடந்து வந்த பயணம் வீடியோ:

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்