இந்தியா
Typography

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை (25/10/2016) முதல் தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

தமிழகத்தில் 2011 -ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.35 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்று 24/10/2016 முடிவடைகிறது..இந்நிலையில் தமிழக அமைச்சரவை  கூட்டம் மீண்டும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (24/10/2016)  மாலை 5.00 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

நாளை (25/10/2016) முதல் தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளை ஏற்க உள்ளனர். எனவே, இதுக் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்