சமயம்

பிராணயாமம் குறித்து மற்றவர்களை விட சுவாமி சிதானந்தா சொல்லியிருக்கிற எளிய செய்முறை விளக்கங்கள் பயன் தரக்கூடியவை. இந்த முறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது சொற்களிலேயே இதனை பார்க்கலாம்.

பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை. பிராணன் வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் மேற்சொன்ன மூன்று செயல்களும்.


பிராணன் ஒரு உடல் உறுப்பு அன்று. ஆகையால் நாம் அதனை காணமுடியாது. சுவாசிப்பதைக் கொண்டு அது இருப்பதை யூகிக்கலாம். காற்று சுவாசமாக உள்ளே இழுக்கப்படுகிறது. பிராணனின் ஒரு குறிப்பிட்ட வேலையினால், அது வெளியே தள்ளப்படுகிறது. இவ்வாறு பிராணன் (உடலில் தங்கி) வேலை செய்து கொண்டிருக்கிறது.

சிலர் அநேக பிராணன்கள் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் ஒன்று தான் என்கிறார்கள். உண்மையில் பிராணன் என்பது ஒரு ஆற்றல் தான். ஆனால் நாம் செய்யும் பல்வேறு வேலைகளை வைத்து பார்க்கும் போது பலவாறாக தோன்றுகின்றன.

பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள். பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும்.

பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன. உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது.

பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்க வேண்டியது

பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும்.

பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும். யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.

சவாசனம் என்ற சாந்தி ஆசனம் செய்யும் முறை

முதல்நிலை:- விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்ந்தாற் போல் நீட்டிக் கொள்ளவும். கைகளை பக்கத்தில் உடலில் சேர்த்தாற் போல் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கையும், விரல்களும் தன்னிச்சையாய் பாதி மூடியும், பாதி மூடாமலும் இருக்கலாம். கழுத்து நேராய் வளையாமல் இருக்க வேண்டும். முகம் பக்கங்களில் திரும்பாமல் மேற்கூரையை நோக்கி இருக்க வேண்டும். கண்களை முழுவதும் மூடிக் கொள்ளலாம். அல்லது லேசாக பாதியும் மூடியும் இருக்கலாம். ஆனால் சிமிட்டல் கூடாது. உடல் முழுவதும் விறைப்பு இருக்க கூடாது. தளர்வான நிலையில் இருக்க வேண்டும். உடலின் எந்த பகுதியையும் இழுத்து பிடித்த இறுக்கமான நிலையில் வைத்திருக்க கூடாது. மிகமிக தளர்வாக நெகிழ விட வேண்டும்.

இரண்டாவது நிலை:- மனத்தை வேறு எந்த நினைவிலும் பதிய விடாமல், எந்த எண்ணத்தையும் மனதில் நுழைய விடாமல் தடுத்து கீழ்வருமாறு நினைக்கவும். நல்ல வெயில் காலத்தில் ஜில்லென்ற குளிர்ச்சியான தென்றல் காற்று உடலில் படுவது போல் கற்பனை செய்து கொள்ளவும். இது போன்ற காற்று நீங்கள் ஆசனம் செய்யும் இடத்தில் வீசுவதாகவும், அது உடல் முழுவதும் ஊர்ந்து பரவி சுகமளிப்பதாகவும், அதனால் உடல் புளகாங்கிதமடைந்து இன்பம் அனுபவிப்பதாகவும் நினைவில் அனுபவிக்க வேண்டும்.
இதற்கடுத்து நமது உடலில் இருக்கும் உபாதைகள் முழுவதும் சிறிது சிறிதாக நம்மை விட்டு நீங்குவதாக எண்ணவும். சோர்வு, மனஅழுத்தம், காயங்கள், வேதனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக கழன்று வசந்த கால ஓடையின் அருகில் இருக்கும் மண் பெயர்ந்து விழுவதை போல் கழன்று ஓடையில் விழுந்து போவதாக உணரவும். உடல் களைப்பு நீங்கி மிகவும் ஆரோக்கியமடைந்து கொண்டு வருவதாக எண்ணிக் கொள்ளவும்.

மூன்றாவது நிலை:- இதே போன்ற உணர்வு நிலையில் உடலின் ஒவ்வொரு அவயங்களையும், அதாவது கால் விரல்கள் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு அவயங்களாக நினைத்துக் கொண்டு கீழ் வரும் சாந்தி ஜெபத்தை மனதில் மெதுவாக உச்சரிக்க வேண்டும். உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் நோய் உள்ளவர்கள் இப்படி ஜெபத்தை உச்சரிக்கும் போது, நோய் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதி வரும் போது அந்த பாகத்தில் சிறிது நினைவை நிறுத்தி, அங்கிருக்கும் நோய் விலகுவதாகவும், அங்கு சுத்த ரத்தம் பாய்ந்து சுகமடைவதாகவும் நினைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மேற்கொண்டு நினைக்க வேண்டிய அவயங்களில் மனதை செலுத்தலாம்.

சாந்தி ஜெபம்:-
" கால் விரல்களே! உங்களுக்கு தளர்ச்சியை அளிக்கிறேன். ஓம் சாந்தி. பாதங்களே தளர்வீர்களாக ஓம் சாந்தி. கெண்டைக்கால்களே! பலம் அடைவீர்களாக; தளர்ச்சி உண்டாகட்டும் ஓம் சாந்தி. முழங்கால்களே! விழிப்பாய் இருங்கள். துர்நீரை சேரவிடாதீர்கள்; ஓம் சாந்தி. தொடைகளே தளர்வீர்களாக இதோ உங்களுக்கு சுகமளிக்கிறேன்; ஓம் சாந்தி. ஓ மர்மஸ்தானமே! நீ ஆரோக்கியமாக இருக்கிறாய்.; பூரணமாய் இருக்கிறாய்; அடக்கமாய் இரு. என் இஷ்டப்படி நடப்பாயாக ஓம் சாந்தி. மலக்குடலே! உன்னிடம் சேரும் கழிவுகளை எல்லாம் அவ்வப்போது ஒழுங்காக வெளியேற்றும் ஆற்றலை பெறுவாய்; ஓம் சாந்தி. சிறுகுடலே நீ ஆகாரத்தை நன்கு கிரகித்து உடலுக்கு வலிவை தருவாயாக. ஓம் சாந்தி. பித்தப்பையே! நீ அளவான பித்தத்தை அளி; ஓம் சாந்தி. மண்ணீரலே! உன் பணி அபரிமிதமானது; நீ சீரஞ்சீவி! நீ சுகமடைவாயாக. ஓ பாங்கிரியாஸ் என்ற உத்தம உறுப்பே! ஆகாரத்தின் சர்க்கரையை நன்றாய் மாற்றுவாயாக; உன் துணை முக்கியம். ஓம் சாந்தி. அட்ரீனல் கோளமே! நீயே இருதயத்தை ஆட்டி வைக்கிறாய்; நீ சிறப்பாயாக. ஓம் சாந்தி. முதுகெலும்பு எனும் மேரு தண்டமே! நீயே இந்த சரீரத்தை தாங்குகிறாய்; நீ என்றும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பாயாக உன்னை வாழ்த்துகிறேன். ஓம் சாந்தி.

மனத்தை உள்முகமாகவே நுரை ஈரல்களை நினைத்து அதன் ஒவ்வொரு சிறிய சந்துகளிலும் ஆரோக்கியம் ஊடுருவி பாய்வதாக பாவனை செய்து கொண்டே, "உன்னால் தான் உடல் வாழ்கிறது. நீயே பிராணனுக்கு ஆதாரம். கரியமில வாயுவை வெளியில் துரத்தி அகற்றவும். பிராணவாயுவினால் ரத்தத்தை சுத்தி செய்யுவம். எந்த நோய்க்கும் இடம் கொடுக்காதே. என்றும் ஆரோக்கியமாக இரு. ஓம் சாந்தி. ஏ இருதயமே உனக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். என்று ஒவ்வொரு உறுப்புகளையும் மனதில் தியானிக்கவும்.

நான்காவது நிலை:- இந்த ஜெபத்தின் மூலம் உடல் உறுப்புகளை மனக்கண்ணால் தியானித்த பின், மனத்தை புருவ மத்தியில் நிறுத்தி மனத்தை எங்கும் செல்லவிடாமல் ஐந்து நிமிடம் தியானத்தில் இருக்கவும்.

பலன்கள்:-உடலின் சக்தி அதிகரிக்கும். களைப்பு நீங்கும். உற்சாகம் மேலிடும். நரம்புகள் அனைத்தும் பலம் பெறும். மனம் தீர்க்கமான அமைதி அடையும். வசப்படும். புத்தி தெளிவடையும். எதிலும் ஆழ்ந்த கவனமும், விழிப்புணர்வும் ஏற்படும்.

அடுத்த தொடரில் பிராணயாம பயிற்சிகளின் வெவ்வேறு வடிவங்களையும், அத்துடன் பிராணயாமம் செய்ய உகந்த சுகாசனம் பற்றியும் பார்க்கலாம்.

-4தமிழ்மீடியாவிற்றகாக: ஆனந்தமயன்

ஏனைய யோகா பதிவுகளைக் காண இங்கே

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.