சமயம்

இரு முடிதாங்கி ஒருமனதாகி குருவென வந்தோம்.
இரு வினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடி காணவந்தோம்.
சுவாமியே ஐயப்பா ஐயப்பா சுவாமியே
சரணம் ஐயப்பா.

லோகவீரம் மகாபூஜ்யம் சர்வரட்சாகரம் விபும் பார்வதி இருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரண மாம்யகம்
பூத நாத சதானந்தா ஸர்வ பூத தயாபரஸ ரச்ச ரச்ச மகா பாகோ சாஸ்த்ரேதுப்யம் நமோநமோ.

தத்துவாதீதனாக விளங்கும் சுவாமி ஐயப்பன் மகர ஜோதியாக தரிசனம் தரும் நாளாம் தைமுதல்நாள் அன்று மாலை ஐயப்பபக்தர்களுக்கு எல்லாம் அருள் பாலிக்கும் நாளாக தைத்திருநாள் அமைகிறது. மெய்யப்பனாக விளங்கும் ஐயப்பனை நெய்யால் அபிஸேகம் செய்து பதினெட்டுபடிகளிலும்  நெய்விளக்கேற்றி மலர்மாலைகளால்  அலங்கரித்து தாம்பூலம்முதல் கணிவர்க்கங்கள் பணிகாரங்கள் செய்து படைத்து கற்பூர ஆராதனை செய்து மலர்களால் அர்ச்சித்து ஸ்தோத்திரம் பாடிஐயப்பஜனை பாடி ஆனந்தமுடன் வழிபடுவோர்க்கு வாழ்வு ஆனந்திக்கும். தத்துவம் நிறைந்த உண்மை எனும் சொல்லுக்கு உறைவிடம் மெய்யப்பன். இந்து மதம் தத்துவங்களுடன் கூடிய வழிபாட்டு முறைகளைக் கொண்டதாக விளங்குகிறது.ஒவ்வொருவழிபாடும், விரத அனுட்டானங்களும் வெறுமனே மேற்கொள்ளாது அவற்றை உயிரோட்டமான தன்மையிலேயே அனுசரித்து விரதங்களை மேற்கொண்டு நம்முன்னோர் வழிபாடாற்றினர். அவர்கள் அனுட்டித்த சமயவழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் ஆக வேண்டி தொடங்கப்படும். அதனால் பலகாரியங்கள் ஆகி நன்மை பயத்ததும் உண்டு. அதுதான் உண்மை.
 
அது இறைவனாகட்டும், தேவர்களாகட்டும்,  முனிவர்களாகட்டும் மனிதர்களாகட்டும் யாவருமே அதில் அடங்கியவர்களாகவே எமது  வேதங்கள் புராணங்கள், இதிகாசங்கள்,குறிப்பிட்டுக் காட்டி உள்ளன.. அந்த வகையில் அரிக்கும் அரனுக்கும் புத்திரனாக பிறந்த அரிகரபுத்திரன் மணிகண்டன் ஆக அவதரித்ததும் எமக்கு அருளும் நோக்கில் சபரிமலையில் கோவில் கொண்டு நித்திய பிரம்மசாரியாக தவத்திருக்கோலமாய் அமர்ந்து அருள் பாலிப்பதுவும் எமது நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்தாலே ஐயப்பன் ஆனந்த வாழ்வழித்திடுவான்.

எம்மை சுத்தமாக்கி தூயநீராடி  காரத்திகைமாதம் முதல் மாலை அணிந்து  கரிய உடை காவி உடை அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று கூறி நாற்பத்தொருநாள் விரதம் அனுட்டித்து சைவஆசார சீலர்களாக ஐயப்பன் கோவில் சென்று வழிபட்டு இயலாதவர் ஐயப்ப சிலை அல்லது ஐயப்பனின் படத்திற்கு கற்பூர ஆராதனை பண்ணி வழிபட்டு ஐயன் அருள் பெற பஜனை பாடி வழிபட வேண்டும்.பக்தியோடு சபரி யாத்திரை சென்று அங்கு  சபரிமலைஏறி கோவிலில் பதினெட்டுப்படிகளும் ஏறி சுவாமியை தரிசிப்போருக்கு ஜெயம் உண்டாம். வெற்றியைக் குறிக்கும் எண் பதினெட்டு ஆகும். பதினெட்டு திருப்படிகளும் அவ்வாறு அஸ்டமாசித்திகளைக் குறிக்கும் பதினெட்டு திருப்படிகளையும் கடந்து ஐயப்பனை தரிசனம் செய்தவர் யாவும் கைகூட ஐயப்பனிடம் ஐக்கியப்படுகிறார்கள்.அப்படி எமக்குள் இருக்கும் பஞ்சஇந்திரியங்கள் மெய் வாய் கண் மூக்கு செவி இவற்றோடு ஐந்து தன்மாத்திரைகள் ஓசை ஊறு நாற்றம் ரூபம் சுவை ஆகியவையோடு மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் நான்கு அந்தக் கரணங்களும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களோடு ஆன்மா என்பன சேர்ந்த இப்பதினெட்டு தத்துவங்களையும் அடக்கி ஆண்டு அவற்றினின்றும் நீங்கிபின்பே இறைவனாம் ஐயப்பசுவாமிக்குள் ஐக்கியம் அடைய வேண்டும் என்ற பேருண்மைத்தத்துவதை இப்பதினெட்டு படிகள் விளக்குகின்றன.

சபரியாத்திரை செல்வதும் இறை அனுபவத்தை பெறும் ஒரு வழியாகும். ஆறு ஆதாரங்கள் மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி சுழுமுனை சஹஸ்த்ராரம் எனும் ஏழாவது ஆதாரம் பொன்னம்பலமேடு என்ற கோட்டை வாசலாக இறைவனாகிய பூதநாதன் இருக்கும் இடமாகும். ஆக ஆதாரங்கள்வழி எருமேலி காளைக்கட்டி, உடும்பாறை கரிமலை சபரிபீடம் சரங்குற்றி அதாவதுஆறாவது கோட்டைவாசல் வழி சென்று சரம் என்றபிராணவாயுவான அம்பினை சரங்குற்றியென்ற சுழுமுனையில் வைத்த பின்பே துரியங்களைக்கடந்து துரியாதீத வெளியை அடைந்து அங்கு வீற்றிருக்கும் சபரி ஐயப்பன் அருளைப் பெறலாம். திருமாலை அணிந்து  விரதம் காத்து இருமுடி கட்டி தலையில் சுமந்து யாத்திரை செல்வர்.இந்த இருமுடியில் அபிடேகப்பொருட்கள் நெய்த்தேங்காய் அதாவது தேங்காயை துளையிட்டு இளநீரை வெளியகற்றி அதற்குள் நெய்நிரப்பி சீல்வைத்து அடைப்பர்.. அதனுடன் குங்குமம் சந்தனம் அரிசி வெல்லம் பழம் யாவும் வைத்து முடிகட்டுவர். அதை முன்பாகவும் பின்முடியில் உணவுத்தேவைக்காகவும் வழியில் அன்னதானம் செய்யவும்  அரிசியும் கரிய நிறகாவிஆடையும்  எடுத்து கட்டி  முடிகட்டுவர். புறப்படும் முன் கோவிலில் இருமுடி கட்டி குருசுவாமி ஆசி பெற்று ஐயப்பனை வணங்கி தலையில் சுமந்து  செல்வர்.

 தாமே தலையில் இருமுடி சுமந்து செல்வர். தமது காரியங்களை தாமே கவனிக்க வேண்டும். குருசாமி தலைமையில் ஏனைய சாமிமார்களையும் புதிதாகச் செல்பவரை கன்னிச்சாமி எனவும் கூறி யாத்திரை செல்வர். பின்முடியில் உள்ளது பாவச்சுமை வழிஎங்கிலும் படிப்படியாக குறையும் இறைவனின் அபிடேகப்பொருட்கள் மட்டும்முன்முடியில இறை அருளுடன் எம் கூடவேவந்து அளவு குறையாது இருக்கும். நமக்கு வழிகாட்டியாக கூடவே துணையாக வந்த அப்பொருள்களுடன்  மலைஏறுவர்  சபரிமலை கோவில் வந்ததும் சச்தியமான பொன்னு படினெட்டு படிகளையும் கடந்து இறைவனுக்கு   அபிசேக ஆராதனைகள் செய்வர். சபரிகீரிசனின் திவ்விய தரிசனம் கிடைத்ததும் பாவங்கள் சுமைகள் குறைந்து ஐயப்பனுடன் ஐக்கியமாகி நிறைவு பெற்று பெருவாழ்வு அடைவர். என்பதைக் குறித்துக்காட்டுவதே இருமுடித்தத்துவமாகும்.

தாய் தந்தை ,குரு தெய்வம் பெரியோர் இவர்களை மதித்து வணங்க வேண்டும் எனும் கோட்பாட்டைக் கொண்டு இவ்விரதம் அனுட்டிக்கப்படுகிறது. எல்லோரும் கூடி சரணகோசம் பாடி ஆனந்த சித்தன் ஐயப்பனை கூட்டு வழிபாடு செய்து வழிபட ஒற்றுமை வலுப்படுகிறது. எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. இனமத பேதமற்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் ஐயப்பனை வழிபட்டு விரதம் அனுட்டித்து பல நலன்களையும் அடைகின்றனர். யாத்திரையின் போது அங்கு கூடும் பக்தர்களும் அவர்கள் செய்யும் வழிபாடுகளின் மூலமும் நாம் அறியலாம். தைமாத பிறப்பில் தைப்பொங்கல் திருநாளில் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பலமேட்டில் காணும் ஜோதி ஒளியை அன்றைய தினத்தில் சபரிகிரி கூடும் பக்தர்கள் கண்ணாரக் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவர். நாமும் ஐயப்பனை மெய்யோடு நெய் கொண்டு நீபோனால் ஐயப்பனை நீகாணலாம். எனும் கூற்றுக்கு இணங்க குறைதீர்த்து நிறைவாக்கும் ஐயன்   தரிசனத்தை காணும் பேறு பெற்று உய்வோமாக. ஐயப்பதரிசனத்தால் கிடைக்கும் நற்பலன்கள் எழுத்தினாலோ சொல்லினாலோ எடுத்தியம்ப இயலாது. அத்தகைய ஐயப்பன் மகிமை மேலானது. சாமியே சரணம் ஐயப்பா. சாமியே சரணம் ஐயப்பா.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.