இந்தியா
Typography

நேதாஜி குறித்த ரகிசயங்களைக் கண்டறிய உயர் நிலைக் குழுவை அமைக்க கோரிக்கை வைத்து நேதாஜி குடும்பத்தார் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு, மேற்கு வங்க அரசு என்று இரண்டு அரசுகளும் நேதாஜி மர்ம மரணம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டபோதும், அதில் முக்கிய கோப்புக்கள் எதுவுமில்லை என்பதே நேதாஜி குடும்பத்தினரின் பெரும் மனக்குறை. அந்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரரின் மரணம் என்பது எங்கு, எப்போது, எப்படி நிகழ்ந்தது என்பது இத்தனை வருடங்கள் புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.  

கடந்த வாரத்தில் கூட ஜப்பான் நாட்டு அரசு, தைவான் விமான விபத்தில்தான் நேதாஜி உயிரிழந்தார் என்று, விசாரணைக் குழு  அறிக்கைத் தெரிவிதத்து. இருப்பினும் நேதாஜியின் குடும்பத்தினர் சமாதானம் அடையவில்லை. இந்நிலையில்தான்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனது குறித்த வெளிநாட்டு ஆவணங்களின் ரகசியங்களைக் கண்டறிந்து வெளியிடுவது முக்கியம் என்றும்,இதற்கு என்று  உயர் நிலைக் குழுவை  அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக நேதாஜியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Most Read