இந்தியா
Typography

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு 20 தமிழக மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். இதனால், தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த 21ஆம் திகதியும் நான்கு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இதுவரை 20 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 137 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்