Sunday, May 19th

Last update10:35:12 PM

நவராத்திரி விழாவின் 7 வது நாள் : திருப்பதி ஏழுமலையான் திருமாட வீதி உலா!

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, திருப்பதியில் ஏழுமலையானின் திருமாட வீதி உலா நிகழ்ச்சி நடைப் பெற்றது.

ஏழுமலையான் ஸ்ரீதேவி மற்றும் பூமா தேவியுடன் பல்லக்கில் திருமாடவீதி உலா வந்தார்.

நவராத்திரிப் பண்டிகையின் முக்கிய நாளாக இந்த 7 வது நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த 7 வது நாளில் திருப்பத்தில் உள்ள ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் பல்லக்கில் திருமாட வீதி உலா வந்தார். இந்த திருமாட வீதி உலாவைக் காண, பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து இருந்தனர். இதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

சிறப்பு வைணவத் திருத்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், சிறப்பு பூஜைகள் நடைப் பெற்றன அலமேலு மங்கைத் தாயார் கண்ணாடி மண்டபம் வந்து பக்தர்கள் திருவடி சேவை புரிய காட்சி தந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவின் இன்றைய 7 ஆம் நாள் மட்டும்தான், அலமேலு மங்கைத் தாயாரின் திருவடி சேவை செய்யமுடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus