Thursday, May 23rd

Last update05:57:13 PM

சூப்பர் சிங்கர்ஸ் 2013 தெரிவுப்போட்டி முடிவுகள்

ஐரோப்பிய ரீதியில் நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர்ஸ் 2013 தெரிவுப்போட்டிகளின் முடிவுகளை,

போட்டி ஏற்பாட்டாளர்களான தூரிகை நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். போட்டியாளர்களிலிருந்து நடுவரால் உடனடியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள், ஆகியோருடன் மக்கள் வாக்களிப்பு மூலம், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மேலும் ஒருவர் தெரிவு செய்யப்படவுமுள்ளார்கள். இவ்வாறு மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவதற்காக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இருவர் என்ற வகையில் பத்துப் போட்டியாளர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திறமையினை வாசகர்கள் அறிந்து, வாக்களிக்கும் வகையில் முதலில் அவர்களது, பாடல் கனொளிகள் (Video) விரைவில் இங்கு வெளியிடப்படும். அத்துடன் அவர்களுக்கு வாக்களிக்கும் முறை, வாக்களிப்பு நிறைவு செய்யப்படும் திகதி என்பனவும் அறியத் தரப்படும். இவை வெளியிடப்படும் தினத்திலிருந்து, குறிக்கப்படும் நாட்களுக்குள் பொருத்தமானவர்களை, அறிவிக்கப்படும் வாக்களிப்புக்கள் மூலம் வாசகர்கள் தெரிவு செய்யலாம். இவ்வாறு தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களும் ஏனைய போட்டியாளர்களுடன் அடுத்த கட்டப் போட்டிகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

புலம்பெயர்சூழலில் பல்வேறு சூழ்நிலை அழுத்தங்கள் காரணமாகத் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்த, வளப்படுத்த முடியாதிருக்கும் இசையார்வலர்களின், இசைத்திறனை வளரத்தெடுக்க உதவும் களமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ் இசைக்களத்தில், அடுத்தகட்டப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர்களுக்கான குரல் பயிற்சி, பாடல் பயிற்சி, அரங்காற்றல் பயிற்சி, என்பவை அடுத்தகட்டப் போட்டினுக்கு முன்னதாக வழங்கப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை தெரிவு செய்யப்பட்டுள்ள போட்டடியாளர்களும், வாசகர் தெரிவு மூலம் தெரிவு செய்யபடவுள்ள போட்டியாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான நன்முயற்சியொன்றில் போட்டி ஏற்பாட்டாளர்களான தூரிகையுடன், ஊடக அனுசரணையாளர்களாக இணைந்திருக்கும் 4தமிழ்மீடியா, இம் முதன் நிலைப் போட்டிகளின் முடிவுகளைத் தற்போது அறியத் தருகிறது. தூரிகை நிறுவனத்தினால் நேற்று மாலையில் வெளியிடப்பட்ட இந்த இறுதி முடிவுகளை, இப் போட்டி நிகழ்வின் சிறப்பு வீடியோப் பதிவுகள் சிலவற்றோடு இங்கே தருகின்றோம்.

20.10.2012 அன்று இப்போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியபோது, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், Super Singers 2012 youth பிரிவில் முதலாமிடத்தில் தெரிவாகியிருந்த வெற்றியாளர், செல்வி: வைஷ்ணவி, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடலைப் பாடி, ஆரம்பித்து வைத்தார்கள். அப்பாடலின் பதிவோடு போட்டி முடிவுகளை இங்கே தருகின்றோம்.

Results of Super Singer 2013 Selection Round

Green: Spot Selected

No Color: Selected by Points

Yellow: Voting over 4Tamilmedia

போட்டியில் பலர் கலந்து கொண்ட போதும், தெரிவு நிலைகளுக்கான அடிப்படைப் புள்ளிகள் பெறாதவர்கள், அடுத்தகட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்படாத போட்டியாளர்களாக விலத்தப்பட்டுள்ளார்கள். அவ்வாறு விலத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இங்கு அறியத் தரப்படவில்லை .

நடந்து முடிந்த தெரிவுப் போட்டிகள் குறித்து, நடுவராகக் கலந்து கொண்ட தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.என் சுரேந்தர் தெரிவித்த கருத்துக்களைக் கீழேயுள்ள கானொளிப்பதிவில் காணலாம்.

மக்கள் தெரிவுக்கான விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

 

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus