ஒருநிமிடம்

88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018(International Geneva Motor Show -2018 ) மார்ச் 8 ஆம் திகதி தொடங்கி மார்ச் 18 ஆம் திகதி வரை, சுவிற்சர்லாந்து, ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

வருடந் தோறும் மார்ச் மாதத்தில், ஜெனீவா கொயிண்ட்ரீன் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே Palexpo என்ற மாநாட்டு மையத்தில் இக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

1905 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த மோட்டார் கண்காட்சி, கார் தயாரிப்பு வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான அனைத்து சர்வதேச சுவட்டு எரிபொருள் (internal combustion engined) கார் மாடல்களையும் காட்சிப் படுத்தி வந்துள்ளது. இதில் பென்ஷீன், டீசல் எஞ்சின், மற்றும் Steam எனப்படும் எரிவாயு போன்றவற்றால் இயக்கப் படும் கார்களும் அடங்கும்.

இந்த கார்க் கண்காட்சியின் போது கார் முன்மாதிரிகள் (prototypes), புதிய உபகரணங்கள் (new equipment), தொழிநுட்ப சாதனைகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் என்பனவும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

இவ்வருடம் கண்காட்சியில்,தற்போது மோட்டார் தயாரிப்புத் துறையில் முன்னணியில் இருந்து வரும் மின்சாரம் மூலம் இயங்கும் (electrict vehicles) வாகனங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

உலகில் மிகவும் பிரசித்தமான Audi, Jaguar, Hyundai, Volkswagen, Porsche மற்றும் Ssangyong உட்பட பல மாடல் கார்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள இவ்வருட கண்காட்சியில் சிறப்பு, அடுத்த ஆண்டுகளில் விற்பனைக்கு வரவுள்ள பறக்கும் கார்களின் அறிமுகமாகும்.

இக் கண்காட்சியினைக் கண்ணுற்ற 4தமிழ்மீடியா வாசகர்  வேணு அவர்களின் பதிவுகளில் உருவாகியுள்ளது இந்த ஒரு நிமிடக் கானொளித் தொகுப்பு இது..

இதுபோன்று உங்கள் அனுபவங்களும் பதிவாக விருப்பமா..? என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி அறிக !

காலங்களைப் பதிவு செய்வோம்..! http://ow.ly/jJBR30iUfQc

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.